பக்கம்:மீனோட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மீனோட்டம் இப்பொ எனக்கு ஒண்னு தோன்றது- என்றாள் அவள். வார்த்தைகளுக்கு அவன் காத்திருந்தான். நாம்ட பேசி யிருக்க வேண்டியதும் செஞ்சிருக்க வேண்டியதும் பேச வேண்டியதும் செய்ய வேண்டியதும் ரொம்பரொம்ப இருக்கு ஆனால் இப்போ நேரமில்லை. நாளெல்லாம் நிமிஷமாய் ஒடிப்போயிட்டாப் போலிருக்கு-” . ஆம் என அவன் தலையை அசைத்தான். வாழ்க்கை யிலேயே நிமிஷங்கள் தாம் இருக்கின்றன. திடீரென்று கோபத்தில் பொங்கும் அவசரத்துடன் ஆனால் நான் உங்களை மன்னிப்புக் கோருகிறேன்னு அர்த்தமில்லை- என்றாள். சரி-சரி என்று அவளைச் சமா தானப்படுத்தினான். இப்பொழுது அவளுடைய நம்பிக்கை யற்ற நிலைக்கு அவன் மனம் தனியாய் இரங்கிற்று. இருந்த வரைக்கும், இருக்கும் நாளெல்லாம் பொறுப்பற்று விளையா டிக் கொண்டிருந்து விட்டு, திடீரென்று எதிர்பாராதவித மாய், எதிர்பாராத சமயத்தில், அந்த இருப்பிற்கே முற்றுப் புள்ளியும் எதிர்பட்டுவிடவே, அவளுக்கு இதுவரை இருந்த இருப்பே திகைப்பாயிருந்தது. சாவு, தன்னைக் கண்டு அவள் பயப்படுவதற்குக் கூட அவளுக்குச் சகவாசம் அளிக்கவில்லை. அந்த முதல் திகைப்பிலேயே அவளைக் கொண்டு போய்க் கொண்டிருந்தது, அதன் கருணையே அதில்தான் இருக்கிறது. “பாப்பா-' என்று ஆரம்பித்தாள். "பாப்பாவைப்பற்றிக் கவலைப்படாதே. நான் அவளை! என் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்வேன்-’ அவன் மார்பு வாய்வழி வெளியே குதித்து விடும் போலிருந்தது. "ஆமாம் இப்படி சொல்லிப்பிட்டா நீங்கள் அப்புறம் பண்றத்தை யெல்லாம் நான் பாத்துண்டு இருக்கப் போறே னாக்கும்?-' அவன் மனம் இறுகியது. சாகுந்தறுவாயில்கூட பூனை எலியுடன் விளையாடுவது போல்தான், அவனுடன் அவள் விளையாடினாள். அடுத்த நிமிஷம் இல்லை இப்படி உங்களிடம் சொல்லி ஒப்படைக்காததினாலே, பாத்துக்காமே இருக்கப் போறேளா?-’ அந்த விரக்தியும் அவனுள் ஊசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/39&oldid=870377" இலிருந்து மீள்விக்கப்பட்டது