பக்கம்:மீனோட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடு 45 பூஜை சாஸ்திரி மூதலாளிக்கு வலதுகை, தோள், முதுகு எல்லாம் ஹரிஹரம், மார்க்குலையின் நரை நடுவே, மைனர் செயினில், ருத்ராக்ஷம் தங்கக் கட்டில் புரள்றது. டேப்பா, அவன் பண்ற அமுத்தலைப் பாரய்யா! அவன் குதப்பற தழைக்கு வெள்ளிச் செல்லம்னா வெச்சிருக்காம்! இங்கே நம்ம பாடு சிங்கியடிக்கிறது. இன்னி சாயந்திரம் இவள் அத்திம்பேரைப் பார்த்தாளா? காலையில் அதே கல் காவில்தான் நானும் இடறி விழுந்தேன். இன்னிக்கு ரெண்டு பேருக்கும் கணக்காச்சு. இன்னிக்கு என் கணக்கே கிழிஞ்சு போயிருக்கனும். அடியில் போயிருந்தால் சட்னி, தொட்டுக்கத் தோசையில்லாமல். "அத்திம்பேரே, தெருவில் பார்த்து நடவுங்கள் அவள் குயில் கூவுகிறாள். பின்வnட்டில் அவள் தான் தனி, வேலு: மென்றே அவள் சொல்படி, என்னை உராயராப் போல், ட்ரைவர் தன் கை வரிசையைக் காட்டியிருக்கிறான். 'ஏறிக்கறேளா? கடைக்குக் கொண்டு போய் விடறேன்?" "ஒண்னும் வேண்டாம். இவ்வளவு காலையிலே. இந்த வேகத்தில் என்ன ஜோலிய்ோ?” 'குதிரை தினம் ஓடாட்டா, உடல் திமிர்த்துக்குமாம். காரும் அப்படி ஆயிட்டால்? அது தான் என்ஜோலி. அத்திம் பேரே. ஏற்கனவே கேட்க வேண்டாம். அதிலும் என்னிலும் இரண்டு வயது மூத்தவனால் எனக்குப் பிள்ளையிருக்கான், எனக்கு என்ன வேலையிருக்கும், நீங்களே சொல்லுங்கோ-’ அவள் சிரிப்பு புகைந்தது. பெத்தவளுக்கு ஒரே விசாரம் தான். பெண்களை எப்படியேனும் தட்டிக் கழிக்கணும், பிள்ளைகளைப் பொத்தி வெச்கக்கனும். இவாள் கொடுத்த மாதிரியே வாங்கிக்கும் பெண் இவாள் பிள்ளையைத் தட்டிண்டு போகமாட்டாளா? அது தெரிவதில்லை.” இவள் ஏன் தன் வயிற்றெரிச்சலை என்னிடம் பங்கிட்டுக் கொள்கிறாள், அதுவும் என்னிடம்? இதில் யாருக்குக் கால ணாவுக்கு லாபம்? யாருக்கு யார் தேவலை? இல்லை, இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/46&oldid=870392" இலிருந்து மீள்விக்கப்பட்டது