பக்கம்:மீனோட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

链& மீனோட்டம் அவள் உடல் பூரா வெடுக்கென உதறிற்று. வாயைப் பொத்திக் கொண்டு கொல்லைப்புறம் ஓடினாள். அங்கிருந்து குமட்டல் சத்தம். "ஓ காட்” தலையிலடித்துக் கொண்டான். இருக்கிற சோதனைகள் போதாதென்று இது வேறேயா, இத்தனை நாள் கழித்து? - 'என்னப்பா, எப்போ வந்தே?’’ அபயா உடம்பையெல்லாம் சர்வகோணலில் ஆட்டிக் கொண்டு உள்ளே வந்தாள். காலையிலே சொன்னேனே, எனக்கு லோனா ஹல்வா வாங்கி வந்தையா? கைகளை ஏதோ முத்திரை பிடித்தாள். சனியன், தீனிப் பண்டாரம் எப்பவும் அரைச்சிண்டே யிருக்கணும், மாவுமெஷின் மாதிரி. படிப்பிலே ஒண்னும் காணோம். சுழி, ஒரு நிமிஷம் உடம்பு சும்மாயிருக்கா பார். குரங்கு சேஷ்டை. 'அம்மா எங்கே?' கேட்டுக் கொண்டே உள்ளே போனாள். - 'அப்பா! அப்பா!' அலறல் கேட்டு எழுந்து உள்ளே ஒடினான். தொட்டி முற்றத்தண்டை சுருண்டு விழுந்துகிடந்தாள், அவனுக்குத் திக்கென்றது. குனிந்து மெதுவாய்த் தோளை அசைத்தான். முனகிக்கொண்டு புரண்டாள். உதட்டோரம் ஒரு சிவப்பு நூல் ரொம்ப ஸ்ன்னம்தான். ஆனால் சிவப்பு விழிகள் அலர்ந்தன. எவ்வளவு பெரிய விழிகள், கார்ட்டுன் பொம்மை விழிகள்! 'வா, டாக்டரிடம் போவோம்' 露 炭 翼 ஒண்ணுமில்லே, எல்லாம் பலஹீனம்தான். உடம்பு சளைச்சுப் போனால், உள்ளே இருக்கிறது ஓங்கறத்துக்குக் காத்துண்டிருக்கு. வியாதிகளுக்கு வெளியே போகவே வேண்டாம். எல்லாம் நம்முள்ளேயே இருக்குகள். மளிகைக் கடைக்காரன் சின்னச் சின்னத் தட்டில் பயறு, கொள்ளு, பருப்பு, உளுந்து, பட்டாணி, எல்லாம் மாதிரிக்கு வெச்சிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/49&oldid=870397" இலிருந்து மீள்விக்கப்பட்டது