பக்கம்:மீனோட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மீனோட்டம் அப்பா, நாலு பெண்டுகள் சேர்ந்து விட்டால் போதும், சீக்காளியை நிம்மதியாகப் படுக்கவிட மாட்டார்கள். அதென்ன ஓயாத கேள்வியோ, பதிலையும் அவர்களே சொல்லிக் கொண்டு. இதற்கெல்லாம் நாம் லாயக்கில்லை, இந்த சுத்துப்பட்ட தேவதைகள் நடுவில் மாட்டிக்கொண் டால், முதலில் நான் குளோஸ், அதான் பத்மா உள்ளே போயிருக்காளே, அவசியமிருந்தால் கூப்பிடறாள். அத்திம்பேரே!’’யார்-ஓ இவளா? குழந்தைகள் தான் கொடுத்து வைத் தவர்கள். எந்தக் கவலையும் படாதவர்கள். ஆனால் அவள் கொடுத்து வைத்தவளா? ஆண்டவனுக்குத் தான் தெரியும், என்னம்மா?’’ என் அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்திருக்காள் பார்த் தேளா? நீங்களும் நகைக் கடை.வெச்சிருக்கேளே, இது மாதிரி உங்கள் கடையில் இருக்கோ? சிரத்தையாகக் குனிந்து மோதிரத்தை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார். திருப்பித் திருப்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைகளுக்கு நடுவே ஒரு நீலம், ஒரு கணம் அவர் புருவங்கள் உயர்ந்தன. கர்ண குண்டலம் போல், எப்பவும் கூடவேயிருக்கும் குட்டி பூதக்கண்ணாடி அவர் கை யில் தோன்றியது அவருக்கே தெரியாது. இதென்ன ஒரு நாளா, இரண்டு நாளா? துரக்கத்தில் புரள்கையில் கனவில் கடைதானே மூச்சு! "அத்திம்பேர், என் மோதிரம் என் மோதிரம்-அப்பா அப்பா அத்திம்பேர் என் மோதிரத்தைக் கொடுக்க மாட் டேன்கறாரப்பா!' அப்போதுதான் அறையிலிருந்து வந்த அவனுக்கு அவள் சொல்வது கவனத்தில் பதியவில்லை. அவன் முகம் கவலையில் தோய்ந்திருந்தது. அத்திம்பேர், கைப்பொருள் மேல் பார்வை மாறாமலே 'உங்கள் ஆத்துக்காரி உங்கள் பெண்ணின் எதிர் காலத்தை வைரத்தாலேயே இழைத்து விட்டாள்" அர்த்தம் உள்தோயவே சற்று நேரமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/51&oldid=870403" இலிருந்து மீள்விக்கப்பட்டது