பக்கம்:மீனோட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு 65 நேரம் மெளனமாய் இருந்தார்கள். பிறகு... 'உன் கதை அவ்வளவு ஸ்வாரஸ்யமில்லை’ என்றான் கவி. அதில் காதல், மோஹம் முதலிய சிருங்கார ரஸங் களில்லை, காதல் இல்லாத கதை என்ன கதை!-புலியாம், புலி வேட்டையாம்! பெண்ணாம், பிள்ளையாம்! -- சுத்த 'டார்ஸ்ான்' வேலையாயல்லவா இருக்கிறது-போனாளாம்வரவில்லையாம்-பூ!” கதாசிரியன் திடீரென்று கையை உயர்த்தி அமர்த் தினான். 'இல்லை; வருகிறாப் போலிருக்கிறது-கவனி' ஆம், யாரோ வீட்டை நெருங்குகிறார்கள். காலடியில், சிறு மணியாம் பருக்கைக் கற்கள் சரக், சரக் கென்று நொறுங் கும் சப்தம். கதவு படி'ரென்று திறந்தது. 'யாரது? "நாங்கள்தான்-வழிப்போக்கர்கள்; வழிதவறி விட்டது” 'ஒ சரிதானுங்க - விளக்கை ஏத்துகிறேன் . குந்துங் கண்ணா ஏன் எழுந்திருக்கணும்!-எப்போ வந்தீங்க?" கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, அவன் உள்ளே போனதும்-கவியும் கதைகாரனும் ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரோ காட்டாள் போலிருக் கிறது-பேச்சில் ஒன்றும் நாஸ்ஸூக்கைக் காணோம்! "ஒரு சிறு தகர விளக்கை எங்கேயிருந்தோ அவன் ஏற்றிக் கொண்டு வந்து வைத்தான். அவனது முதுகில் ஒரு சிறு மூட்டை இன்னும் தொங்கியது. - "பார்த்தால் எசமான்மார் மாதிரி இருக்குதுங்களேசாப்பாடு ஏதாவது ஆச்சுங்களா-அடபாவமே!-தனியாய் வந்து அகப்பட்டுக் கொண்டீங்களா?-பரவா இல்லிங்க, காத்தாலே எழுந்திருச்சுப் போவலாம்-ஊர்லேயிருந்துகீரைத்தண்டும் முள்ளங்கியும் வாங்கி வந்திருக்கிறேங்கஇதோ சடுதியிலே சமையல் செய்துடறேனுங்க. மாமியார் வீட்டுக்குப் போயிருந்தேனுங்க-பெண் ஜாதி பிள்ளைத்தாச்சி. நேத்துக் காலை, அவளையும் மவனையும்-ஆமாங்க, பத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/66&oldid=870436" இலிருந்து மீள்விக்கப்பட்டது