பக்கம்:மீனோட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு 67 அவன் உள்ளே சென்றதும், இருவரும் ஒருவரையொ ருவர் ஒரு கணநேரம் விறைத்து நோக்கிக் கொண்டிருந் தார்கள். - - ‘'நீ யேன் இந்த வைத்தியரைப் பார்க்க வேண்டும்?-” 'நீ மாத்திரம்?? 'நான், அவருடைய விளம்பரத்தைக்கண்டேன், பத்திரி கையில் அவருடைய புது மருந்துக்கு நல்ல விளம்பரம் செய்யக் கூடிய ஒர் ஆள் வேண்டுமாம்-நாம் ஏதோ கதையெழுது கிறோமே, நம்முடைய எழுத்து வன்மை, விளம்பரத்துக்கு உபயோகப்படாதா, அதனால் நமக்கும் கொஞ்சம் பணம் வராதா என்ற எண்ணம்தான். அவர் விலாசத்துக்குக் கடிதம் எழுதினேன்; என்னுடைய கதைத் தொகுதியையும் அனுப்பினேன். எழுத்தில் எனக்கு இருக்கும் அனுபவத்தைப் பற்றி அவருக்கு அத்தாட்சி வேண்டாமா, அதற்காகவே கதைத் தொகுதியை அனுப்பினேன். நேரில் வந்து காணும் படி பதில் வந்தது-அதனால்தான் கிளம்பி வந்தேன்.” - "அதே சமாசாரம் தான் நம்முடையதும்-நீ படித்த பத்திரிகையேதான் நானும் படித்தது. உனக்குத் தோன்றிய எண்ணம் தான் எனக்கும் உதித்தது. வெறுமையே வளைத்து வளைத்து எழுதினால் மாத்திரம் போதுமா?-சாற்றுக்கவி, ஒரு சின்னப் பாயிரம்-ஒரு சிறிய பாட்டுப் புத்தகம்-மூலிகை களின் சிலாக்கியத்தைப் பற்றி நல்ல, புது ஹிந்தி டியூன்களில்' அமைத்து விடலாம். இந்த என் யோசனையை அவருக்குத் தெரியப் படுத்தியதும்-என்னையும் வரும்படி எழுதினார்.பார் இதோ கடிதம். மருந்துகள் விற்க, பாட்டைப்போல் வேறே நல்ல மந்திரம் கிடையாது-இதை மாத்திரம் மனதில் முடி போட்டுக் கொள்.' 'அட வயிற்றுப் பிழைப்பின் கொடுமையே!” என்று கதாசிரியன் தலையிலடித்துக் கொண்டான். கொஞ்சநேரம் கழித்து ஆ! ஞாபகம் வந்தது-உள்ளே வா; அந்த ஆளை ஒரு கேள்வி கேட்கவேண்டும்.’’ என்று கவி, கதாசிரியனை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/68&oldid=870440" இலிருந்து மீள்விக்கப்பட்டது