பக்கம்:மீனோட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 'ஏய் நீ என்ன பார்ப்பாரப் பெண்ணாயிருக்கையா, நீ!. அதுவும் கோவில் பூஜை செய்யற குடும்பமாவா இருக்கே? மீன் பிடிக்கிறையே, மீன்!!-' - போடா, கையாலாகாட்டா, வாயை மூடிக்கோயேன்நீ மாத்திரம் பார்ப்பானில்லையோ பிடிக்க வகையில்லையாம். அஹங்காரத்தைப் பாரு-’’ எனக்கு ஆத்திரம் பொங்கிற்று. 'நிறுத்துடி-வாயை மூடு-ரொம்ப ரொம்ப நீட்டிநீட்டிப் பேசறையே மணியாட்றவன் பெண்ணே-’’ 'சரிதானப்பா, ரொம்ப ரொம்ப அலண்டு போயிடாதே. உங்கப்பா உத்யோகம் பண்ணினால்-உங்காத்து மட் டோடே-’ எனக்கு வெறி உச்சந்தலைக்கேறிவிட்டது. “என்னடி ஒங்கப்பன், எங்கப்பன் இன்னு பேசறே? பல்லை ஒடைச்சுப் புடுவேன்- என்று சொல்லிக் கொண்டே, முதுகில் ஒன்று வைத்துவிட்டேன். அவ்வளவுதான். ஆற்றங் கரையில் ஓங்கி நிற்கும் மணற் குன்றுகளிடையில் அவள் அழுகை நல்ல சப்த சுத்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அவளை அடித்தது தான் தாமதம். என்னை வாதித்த வெறியும் தணிந்து விட்டது. அசடு வழிந்த முகத்துடன், வெயிலில் மீன்துண்டுகள் போல் வயிற்றைப் புரட்டிப் புரட்டித் துள்ளும். அந்தச் சிறு மீன்களைப் பார்த்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/70&oldid=870445" இலிருந்து மீள்விக்கப்பட்டது