பக்கம்:மீனோட்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 73 பக்கத்துருக்குப் போயிருந்தேன். சாயந்திரம்தான் திரும்பி வந்தேன். கலியாணப் பெண்ணே காப்பி கொண்டு வந்து விசிப் பலகையில் வைத்தாள். "கொஞ்சம் ஒழிந்திருக்கிறாப் போலிருக்கிறது!றேன். வெற்றிப் புன்னகையுடன் பின்னிடைந்தாள். இத்தனை தடபுடலுக்கும் காரணியாயிருப்பதன் இறுமாப்பு 'ரொம்ப அவசரமோ! எல்லாம் பழைய கங்கா தானே! வெட்கமோ?’’ சிரித்தாள், பின்னலில் கட்டி இருக்கும் தாழம்பூவை முகர்ந்து கொண்டே. 'இதோ பார், உனக்குக் கல்யாணப் பரிசு வாங்கி வந் திருக்கிறேன்-’ என்று கையிலிருந்த பொட்டணத்தைப் பிரித்து, சாமானைப் பலகையின் மேல் வைத்தேன். வெள்ளியில் வெற்றிலைப் பெட்டி; மீன் உருவத்தில் நிர்மாணம். இரு கண்களையும் உள் குடைந்து, ஒரு குழியில் பாக்கு, மற்றொன்றில் சுண்ணாம்பு. குழிகளின் மூடிகளின் பேரில் நீலக்கற்கள் புதைத்திருந்தன. அவைதான் மீனின் கண்கள், முதுகைத் திறந்தால் வெற்றிலை வைத்துக் கொள்ள இடம். மீன் வெகு களையாய்ப் பாய்ச்சலில் நின்றது. அவள் கண்கள் மலர்ந்தன. சிரித்துக்கொண்டே அதைத் தடவ ஆரம்பித்தாள். அவளுடைய உதடுகள் செக்கச் செவேலெனப் பளபளத்தன. திடீரென்று என்னை அவள் ஒரு கேள்வி கேட்டாள். 'மீன் பிடிக்கக் கத்துண்டாச்சா?’ என்றாள். அவள் கண்களில் குறும்பு கூத்தாடியது. என் இதய நோவு விண்விண் எனத் தெறித்தது. சமாளித்துக் கொண்டு- ஊ-ஹாம்-என்ன இருந்தாலும் உன் சாமர்த்தியம் வருமா?-தவிர, பட்டணத்தில் எங்கே மீன் பிடிக்கிறது? எங்கேயும் குழாய் தான். சமுத்திரம் இருக் கிறது, ஆனால் அங்கே உன்மாதிரி கையால் பிடிக்கமுடி யாது-வலையோ தூண்டிலோ தான் போடவேணும் மீ-5 o என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/74&oldid=870450" இலிருந்து மீள்விக்கப்பட்டது