பக்கம்:மீனோட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மீனோட்டம் கன்யாகுமரி. பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. நெஞ்சை மீட்டுகின்றன. அவள் குமரி! நான் குமர்ன். கடலோரம் கோவில், பாறை, பாறைகள், நெஞ்சிலும் பாறைகள், பாறைகளின் மேல் அலைகளின் மோதல்கள், சொல்லுள் அடைபடாது, என் கற்பனைக்கே சொந்தமான கதைகள், கவிதைகள், கதையின் நிழல்கள், நீழல்களின் காதைகள், கமகமப்புகள், கமகங்கள், இம்சைகள் சொல்ல முடிந்தவை, முடியாதவை, பேச்சில் முடிந்தவை, முடிந்தாலும் பங்கிட்டுக் கொள்ள மனம் வராதவை, சொல்லச் சொல்லஇல்லை இல்லை தலை சுத்தறது. சுற்றட்டும். மாரடைக்கட்டும், வெடிக்கவே வெடிக் கட்டுமே! உயிர் போகாதவரை மார்புள் விண்விண் கன்யா குமரி. கடன்காரி. இதற்காகத்தான், இதைத்தான் நெருப்பில் கை வைக் காதே என்று பெரியவர்கள் கோடமெனும் பேரில் செய்த எச்சரிக்கையா? ஆனால் என்னிஷ்டத்தில் என்ன இருக்கிறது? மொட்டை மாடிமேல் கவிந்த வானத்தில் நக்ஷத்திரங்கள் என்னிடம் ஏதோ சொல்லத் தவித்து மூச்சு விடுகின்றன. இங்கு மட்டுமல்ல. இதே சமயத்தில் கன்யாகுமரியையும் கவிந்து கொண்டிருக்கிறோம் என்றா? அங்கு மாரிக்காலத்தில் மழை மேகங்கள் கடல்மேல், ஜல ரஸம் ஒட, லொங்கு லொங்கென்று குடம் குடமாய், பழம் பழமாய் நாங்கள் தொங்குவதை நீ பார்க்க வேண்டாமா? அவள் அபிஷேக சுந்தரி கடல் நீரில் குளிக்கும் கன்யாகுமரி. சப்தரிஷி மண்டலம் நெஞ்சில் ஏர் பிடித்து உழுகிறது; புவனமே ஒரு ரஸகுண்டு. நம் அவ்வப்போதைய எண்ணங் களின், ஏக்கங்களின் வர்ணங்களை, சாயங்களை உள்ளுக்கு வாங்கிக் கொண்டு ஆசைகாட்டிக் கொண்டு மினுமினுக்கிறது. இரவு நேரத்தில் என்ன வெளிச்சம் எரிகிறது? சொக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/97&oldid=870475" இலிருந்து மீள்விக்கப்பட்டது