பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏழாம் அதிகாரம்
குலோத்துங்கனுடைய போர்ச்செயல்கள்

நம் குலோத்துங்கன் நடத்திய போர்களுள் ஒன்றிரண்டொழிய ஏனையவெல்லாம் இவனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன என்று முன்னரே கூறியுள்ளோம். அப்போர் நிகழ்ச்சிகளைத் தற்காலத்தே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைக்கொண்டு ஒருவாறு ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். அவை :-

1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்
2. நுளம்ப பாண்டியருடன் நடத்திய போர்
3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம்போர்
4. பாண்டியருடன் நடத்தியபோர்
5. சேரருடன் நடத்திய போர்
6. தென்கலிங்கப்போர்

7. வடகலிங்கப்போர்

என்பன. இப்போர் நிகழ்ச்சிகளின் காரணத்தையும். இவற்றின் முடிவையும் கல்வெட்டுக்களும் முன்னூல்களும் உணர்த்தும் குறிப்புக்களைக் கொண்டு சிறிது விளக்குவாம்.

1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்:- இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனோடு கி. பி. 1076-ஆம் ஆண்டில் நடத்திய போர் ஆகும். தன் மைத்துனனாகிய அதி-