பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துக் குளிப்பு

இதுவரை எவ்வளவோ புத்தகங்கள் வெளிவந்து விட்டன. மாதம் தோறும் பலபல புத்தகங்கள் பிரசுர மாகின்றன. இன்னும் புதிது புதிதாகப் புத்தகங்கள் வெளி வந்துகொண்டே யிருக்கும்.

சில சமயங்களில் நான் ஆச்சரியப்படுவது உண்டு -இவ்வளவு புத்தகங்களையும் யாத்தான் படிக்கிமூர் களோ? என்று.

ஆலிவர் கோல்டுஸ்மித் எனும் ஆங்கில இலக்கிய ஆசிரியன் எழுதிய சில வரிகள் எனக்கு அடிக்கடி நினைவில் எழுகிறது. வாரம் தோறும் மூன்று புதிய புத்தகங்கள் பிறக்கின்றன. அவற்றிலே மாதம் மூன்று புத்தகங்களையாவது ஒவ்வொருவரும் அவசியம் படித்து விடுவது என்று திட்டமிட்டுச் செயலாற்றினல், இந் நாட்டில் அறிவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும்’ என்ருன் அவன்.

கோல்டுஸ்மித் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற் ருண்டு. இந்த இருபதாம் நூற்ருண்டில், புத்தகங்கள் வெளிவருவதும் வேகநிலையில்தான் உள்ளது. தமிழில் மாதா மாதம் பிரசுரமாகிற புத்தகங்களில், மாதம் மூன்று புத்தகங்கள் என்ற விகிதத்திலாவது படித்து முடிப்பவர் கள் யாராவது இருப்பார்களோ என்னவோ, நான்

ஆல்ை, புத்தகங்களைப் படிக்காமலிருப்பதே

மேதைத்தனம் என்று எண்ணுகிறவர்கள் நம்மிடையே நிறையப்பேர் உண்டு என்பது எனக்குத் தெரியும்.