பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : 3

பார்ப்பதற்கும் ஒருசில அப்பாவிகள் இருக்கத்தானே வேண்டும்!

எனது படிப்பின் மூலம் நான் உணர்ந்தஉணர்கிற-நயங்களில் சிலவற்றை பிறரும் ரசிக்கக் கூடிய விதத்தில் அவ்வப்போது எடுத்துச் சொல்ல முன்வந்திருக்கிறேன். இப்பகுதியில் சொல்லப்படுபவை சுவையான முறையில் அமைகின்றனவா என்பதுதான் ரசிகர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பாய்ன்ட்’.

密 ※ ※

ஒரு கதை. பலருடைய உள்ளத்தில் நிலைபெற்று விட்ட பெருமையை உடைய கதைகளில் இதுவும் ஒன்று. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது.

ஒரு பெண் வறுமையில்ை விலைமகளாக ஆகித் தொழில் புரிந்து வாழ்ந்தாள், அவள் வீட்டுக்கு யார் யார் வருகிருர்கள், தினந்தோறும் எத்தனை பேர் வந்து போகிருர்கள் என்று கவனிப்பதையே தொழிலாகக் கொண்டான் எதிர் வீட்டில் வாழ்ந்த நல்லவன் ஒருவன். அவளுக்காக வருத்தப்பட்டு, அவள் நடத்தையைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்து, அவள் நினைவாகவே இருந்தான் அவன்.

அந்தக் கெட்டுப்போன மங்கையோ, தான் இப்படி வாழ நேர்ந்துவிட்டதே என்று எண்ணிக் குமைந்து, மனம் புழுங்கி, அழுது கண்ணிர்வடித்தாள்... தினந்தோறும் அவள் இழிதொழிலச் செய்துதான் வாழவேண்டியிருந்தது. நாள் முடிவில் அவள் அழுது வருந்துவதும் நித்திய நியதியாகிவிட்டது.

அவள், செத்ததும், சொர்க்கத்துக்குப் போனள்.