பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அதிகம் உண்டுதான்! இல்லையென்ருல் சுநீதிகுமார் சட்டர்ஜி என்பவர் தமிழ் கற்றவுடன் தமது பெயரை 'நன்னெறி முருகன்’ என்று மாற்றிக் கொள்வாரா என்ன? - ** : - :

அவர் வங்காளிகளும் தமிழர்களும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிருர், அதில் காணப்படும் சுவை யான விஷயம் இது- ::. . ;

வங்காளத்தில் உள்ள நாங்கள், தென்னிந்தியர் களேப் போலவே பல விஷயங்களிலும் சம்பிரதாயங்களை யும் தேசாச்சாரங்களையும் காப்பாற்றி வந்திருக்கிருேம். உதாரணமாக, நாங்கள் இன்னமும் வேட்டிதான் கட்டு கிருேம். தென்னிந்தியாவில் போலவே இன்னமும் எங் கள் பிராந்திய ஆடை வேட்டியும் சட்டையும் காலில் செருப்புமாகவே இருக்கிறது. கிராமங்களிலும், இன்றும் எங்களுடைய சடங்கு விருந்துகளிலும் நாங்கள், தமிழர் களைப் போலவே, வரிசையாகக் கீழே உட்கார்ந்து சாப் பிடுகிருேம். எங்கள் உணவும் அரிசிதான். வாழை இலை போட்டுத்தான் சாப்பிடுகிருேம். தெற்கே தமிழர் கள் சாப்பிடுவதுபோலவே நாங்கள் எங்கள் உணவின் கடைசி அம்சமாகத் தயிர் சாப்பிடுகிருேம். தயிர் இல் லாமல் உணவு பூர்த்தியாவதில்லை. அது தவிர்க்க முடியாத உணவு அம்சம். பழங்காலத்திலிருந்து நமக்கு வந்துள்ள விசேஷங்களில் இதுபோன்ற சின்னக் காரி யங்கள் நூற்றுக் கணக்கில் நமக்குள் பொதுவாக இருக் கின்றன. ஒரு மாறுதலும் இல்லாமல் இன்றும் இருக்கின்றன. இவை மாறுபடாமல் தமிழர்களும் வங்காளிகளும் காப்பாற்றி வந்துள்ளனர். இவை எல்லாம் மேலெழுந்தவாரியான விஷயங்கள். ஆனல் ஆழத்திலே, அறிவுத்துறையிலும் ஆன்மீகத் துறை யிலும் ஒரு ஒற்றுமையும் ஒரே பண்பாடும் இரண்டு பிரதேசங்களிலும் இன்னமும் காணக் கிடக்கின்றன என்பதுதான் பெரிய விஷயம்!”