பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 :

பிறகு, மாலே வந்தது. சந்திரனும் வந்தான். அடாடா, அவனைச் சுற்றிலும் மின்னிமினுக்குகிற குழந்தைப் பட்டாளம் தான் எவ்வளவு பெரியது!

சூரியனுக்கு ஆத்திரமாவது ஆத்திரம்! வெகுண்டு கத்தினன். ஆனல் சந்திரன் அமைதியாக அவனிடம் சொன்னன்: என்மீது கோபம் கொள்ள வேண்டாம். அதோ கீழே நோக்கு. ஆற்றில் உன் குழந்தைகள் ஆமின்னி மினுமினுப்பதைப் பார்!’

உண்மைதான். சூரியனின் குழந்தைகள் எல்லாம் மின்னுகின்ற சிறுசிறு மீன்களாக மாறிவிட்டன.

கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ள இந்த இரண்டு கதைகளும், செக்கோஸ்லோவேக்கியாவில் பிரசுரமாகும் நியூ ஓரியண்ட்’ எனும் பத்திரிகையில் வெளிவந்தன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் புராதன, நவீன கலாசாரங்களைப் பற்றி அக்கறை காட்டும் சஞ்சிகை அது.