பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

யும் கொண்டு, விபசாரத் தொழிற் பெண்களின் வாழ்க்கை முறைகளை அறிவதற்காக அவர்களோடு.பல தினங்கள் விடுதியிலே தங்கியிருந்து ஆராய்ந்து, கலே நுணுக்கத்தோடு இந்நாவலப் படைத்திருக்கிருர் குப்சின்,

நாவலில் வருகிற ஒரு கதாபாத்திரம் மூலம் குப்ரின் குறிப்பிட்டிருக்கிருர்-'நமது வார்த்தைக் கலைஞர்கள் இதை எல்லாம் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விபசார விடுதிகள் பற்றி அவர்களில் யாரும் எதுவும் எழுதவில்லை. ஏதோ அசிங்கத்தைக் கண்டு ஒதுங்குவது போல் ஒதுங்கி விடுகிருர்கள். அல்லது பயமோ? எனக்குத் தெரியாது. விபசார எழுத்தாளன் என்று பிறர் நகைப்பார்களே என்கிற பயமும் இருக்கலாம், அல்லது சுயசரிதம் என்று நினைத்து கொண்டு கெட்டவன் என்ற பட்டம் சூட்டிவிடு வார்களோ என்றும் இருக்கலாம். காரணம் என்னவோ துணிச்சலும் தியாக புத்தியும் உள்ள எவரும் முன்வர வில்லை-நெருங்கி இந்த விபசார வாழ்க்கையைப் பார்த்து விருப்பு வெறுப்பு இல்லாமல் விஷயங்களை சீர் துரக்கி எழுத யாருமே முன்வரவில்லை. அசட்டுப் பரிதாபம் காட்டாமல், பயங்கரமான எளிமிையை, தினசரி வாழ்வை விவரிக்க வல்லவன் வரவேண்டும். எவ்வளவு அற்புதமான மகத்தான உண்மையான புத்தகம் எழுதலாம் தெரியுமா!'

குப்ரின் எழுதியிருக்கும் யாமா அற்புதமான, உண்மையான புத்தகம் என்பதை அதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்வர். இந்நாவலின் ஒரு பகுதியை புதுமைப்பித்தன் தமிழாக்கித் தந்திருக்கிருர்.

‘காதலும் பசியும் தான் உலகத்தை ஆள் கனறன’’.-மனிதனின் துயரங்களைக் கூறும் முடிவிலர்.