பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GÚ

விட்டை அலங்காரம் செய்துவிட்டார். அவர் மனைவி யாக மாறுவதற்குத் தயாராக இருந்த கன்னிதான் யோசனைகள் கூறி, எல்லாவற்றையும் தேர்ந்தெடுத் தாள். செயலான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள்.

- அவளை, தங்கள் திருமணத்தை, அதற்கான முன் எனற்பாடுகளே, எதிர்காலச் சுகவாழ்வை எல்லாம்பற்றி ண்ேணியவாறே பாதிரி எழுந்தார்; முககூடிவரம் செய்து, ஆலயத்துக்கான உடையணிந்து கிளம்பினர். ‘இன்று மழைவராமல் போனுல், இந்த ஊர்க்காரர்கள் என்னை மதிப்பார்களா என்ன?’ என்ற ஏக்கம் அவருள் குடைந்தது. விண்வெளியில் தாவிய அவர் விழிகள் அங்கோள் மேகத்தைக் கண்டன. அவருக்கு ஆண்ட வன் அருளில் நம்பிக்கை உண்டாயிற்று.

ro

பக்தர்கள் பலர் வந்திருந்தனர். ஒரே ஒரு அம்மாள் மட்டும்தான் கையோடு குடை எடுத்து வந்திருந்தாள். அவளுடைய பக்தியையும் நம்பிக்கையையும் வியந்து போற்றினுர் பாதிரியார். அவருடைய காதலி மாலியும், அவளேச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். எல்லோ ரும் தமது ஆற்றலே, பக்தியின் மாண்பை அன்று உணர வேண்டும்-உணரப் போகிருர்கள்-என்ற உள்ளக் களிப்பு பாதிரியாரை ஆட்டி வைத்தது.

ஒற்றை மேகம் கறுத்தது. பெருத்தது. கவிந்து கனத்தது. இடி இடித்தது. மின்னல் பளிச்சிட்டது. ஆண்டவன் உண்மையாகவே தனது பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து விட்டாரா?- பாதிரியால் நம்பமுடிய வில்லை. நம்பாதிருக்கவும் இயலவில்லை.

அவர் உணர்ச்சி வேகத்தோடு உற்சாகத்தோடு பிரார்த்தனைச் சொற்பொழிவு ஆற்றினர். வானத்தின் உறுமல் வலுத்தது. மழை இறங்கியது. சோளுமாரி யாகப் பொழிந்து கொட்டியது. அனைவரும் தம்மை மறந்த பரவச நிலையிலே, பேச்சற்று அமர்ந்திருந்தனர்.