பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







34. பொன் முரசு

கொட்டிடு கொட்டிடு முரசே-எங்கள்
கொள்கை இதுவென்று முரசே.

வித்தையில் வல்லவர் ஆவோம்-மிக்க
வீரர்கள் என்னவே வாழ்வோம்;
நித்தமும் கொட்டிடு முரசே-எங்கும்
நிற்காமல் கொட்டிடு முரசே. (கொட்டிடு)

அண்ணனும் தம்பியும் போலே-நாங்கள்
அன்புடன் இங்கிருப் போமே ;
திண்ணம் இதுகொட்டு முரசே-ஒரு
தீங்கு புரிந்திடோம் முரசே. (கொட்டிடு)

ஏழை பணக்காரர் என்றே-இல்லை
எங்களுக் குள்யாரும் ஒன்றே;
தோழர்கள் நாங்கள் நன்முரசே-கொட்டு
தொம்தோம் எனவேபொன் முரசே. (கொட்டிடு)

உண்மை உரைத்திட அஞ்சோம்-உண்ணும்
உணவுக் கொருநாளும் கெஞ்சோம்;
‘தண்தண தணதண’ எனவே-சற்றும்
தயங்காமல் கொட்டிடு முரசே. (கொட்டிடு)

40