பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தனை விளம்பரமா? வரதட்சணைக் கொடுமையால் எத்தனை ஆயிரம் பெண்கள் நாட்டில் தீக்குளிக் கிறார்கள், அரசியல் வாதிகள் கண்களில் அவர்கள் ஏன் படுவதில்லை தோகை: சே! சே! உயிரின் மதிப்பு இவ்வளவு அற்பமாகவா போய் விட்டது! நம்பி: தற்கொலை ஒரு கோழைத்தனம், வீணா: நான் அவ்வாறு கருதவில்லை! தற்கொலை - தியாகத்தின் அடிப்படையில் தோன்றும் வீரம். நம்பி: வீணா! நீயா இப்படிப் பேசுகிறாய்? வீணா: ஒர் உயர்ந்த குறிக் கோளுக்காகத் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை தன் இனத்தையே அழிக்கும் பெரிய மீனைக் கொல்ல தூண்டில் புழுவாக மாறுவதில் முருகுசுந்தரம் கவிதைகள்