பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோ: 'குழாய்களில் தண்ணீர் இரவும் பகலும்எந்நேரமும் வரவேண்டும்! என்பதுஇரண்டாவது கோரிக்கை, வாணன்: அகமதிப் பீட்டை அகற்ற வேண்டும். அது மூன்றாவது கோரிக்கை. சொற்கோ: அன்று நாம் சிற்றண்டிச் சாலையில் நின்று கொண்டிருந்தபோது "கழுதை கெட்டால் குட்டிச்சுவர்!’ என்று வரலாற்றுப் பேராசிரியர் வன்மீக நாதன் சொன்னாரே நினை விருக்கிறதா? கோபி: ஏன் இல்லாமல்? சொற்கோ: கழுதை என்று மாணவச் செல்வங்களைத் திட்டிய வரலாற்றுப் பேராசிரியர் வன்மீக நாதனை மாற்றவேண்டும்-என்பது நான்காவது கோரிக்கை. கோபி: போதும் போதும்! போராட்டம் எப்போது? முருகுசுந்தரம் கவிதைகள் 165