பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茜耀。 கோ. iįłf. ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம் 1 அடெ பசங்களா!-ரொம்ப ஆச்சரியமான சமாசாரம் ஓங்களுக்கெல்லாம் நானு சொல்லவேண்டிய திருக் குது!-ஆன அது இன்னதுண்ணு என்னெகேக்கா தைங்க இப்பொ சொல்லவேமாட்டேன் எங்கப் பாணே!-நானு நடந்ததெல்லாம் அப்படியே சொல்லி கினு வர்ரேன் கேளுங்க. கொஞ்ச சொல்லப்பா கேப்போம் - என் ராஜா பாதம் நாய்க்கா! இப்போ ஒரு வார்த்தையும் சொல்லமாட்டேன்இப்போ கானு ஒங்களுக்கு சொல்லப்போரதெல்லாம் -கம்ப ராஜா சாப்பிட்டாச்சி இண்ணுதான்! மின்னே உங்க வேஷ சாமான்களெ யெல்லாம் மூட்டெகட்டிங்க-தாடி மீசெங்களுக்கெல்லாம் கவு றுங்க சரியாயிருக்கட்டும், கெஜாருங்களுக் கெல்லாம் நாடா சரியாயிருக்கட்டும். எல்லாரும் அரமனெக்கி வந்து சேருங்க வுடனே-அவன் அவன் பாடத்தெ சரியா படிச்சிகினு எனிண்ணு-சுருக்கி சொல்லிவுட ரேன், கம்ப ராஜா கம்ப நாடகத்தெ கேக்க பிரியப் பட்டிருக்கராரு. திரிசூலிக்கு பொடவெ கிழிச்சலில் லாமே யிருக்கட்டும். சிங்க வேஷம் போட்டுக்கிறவன் நெகத்தெ வெட்டிகவாணும்-ஏனிண்ணு நெகங்க சிங்க நெகம் போலே நீளமாயிருக்கணும் - செநேகிதருங் களே! கொஞ்சம் தயவுபண்ணி-இண்ணேக்கு மாத்தி ரம்-வெங்காயம் வெள்ளெப்பூண்டு சாப்பிடாதைங்க, கம்ப பேசரப்பொ நல்ல வாசனேவரனும், அப்பதான் அவுங்கல்லாம்(நல்லகூத்து இண்ணு சொல்லுவாங்க -கப்சப் பேசாதைங்க இப்பொ போங்க! போங்க! அரமனைக்கி சீக்கிரம் வாங்க வாங்க! (எல்லோரும் போகிறர்கள்.) காட்சி முடிகிறது.