பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ8 தே, ஆஸ்தானபுரம் நாடக சபை |அங்கம ! காட்சி-பெருமீசன் திரிகுலியின் காதல்-சோககர மான சந்தோஷம்'-சந்தோஷம் சோககரமானது! ண்ேடது சுருக்கமானது!-அதாவது கொதிக்கும்படி யான பனிக்ர் ஆச்சரியமான ஆலங்கட்டி மழைநீர்! இந்த எதிர் மொழிகளின் ஒருமைப்பாட்டை காம் எப்படி கண்டறிவது! மஹாராஜா, இந்த நாடகத்தில் சுமார் பத்து வசனங் கள் தானிருக்கின்றன. இதைப் பார்க்கிலும் சுருக்க மான கதையை நான் கண்டதில்லை-ஆயினும் இதில் இருக்கும் இந்த பத்து வசனங்களே அதிகமானவை! ஆகவே இது அதிக நீளம்தான்-ஏனெனில், கதை முழுவதிலும் ஒரு வார்த்தையும் பொறுத்தமானதா யில்லே! ஒரு கடிகளுவது தக்கபடி யில்லே! சோககர மானது என்பதென்னவோ மெய்தான்-ஏனெனில், பெருமீசன் இதில் தற்கொலை செய்து கொள்ளுகிருன், அதை அவர்கள் ஒத்திகை செய்தபொழுது கான் பார்த்தபொழுது என் கண்களினின்றும் கண்ணிர் தாரை தாரையாக வந்தது!-சிரிப்பினுல் இவ்வாறு நான் ஆகக்த பாஷ்பம் என்றும் சொரிந்ததில்லே! இதை ஆடும் நடிகர்கள் யார் ? நமது ஆஸ்தான புரத்தில் வேலை செய்யும் தொழிலாளி கள். அவர்கள் இது வரையில் தங்கள் மூளைகளுக்கு வேலேயே கொடுத்தவர்களல்ல-தங்களுடைய கலியா னச் சடங்கிற்காக, அவர்கள் மூளைகளுக்கு கஷ்டம் கொடுத்திருக்கிருர்கள், . ஆனல் அதைக் கேட்போம் நாம். மஹாராஜா, தாங்கள் பார்க்கும்படியாக அவ்வளவு உசிதமாயிராது. அதை நான் முற்றிலும் கேட்டிருக் கிறேன். அது ஒன்றுக்குமே உதவாதது-இவ்வுல கில் அவர்கள் உங்கள் மனதை ஏதோ திர்ப்தி செய்ய வேண்டுமென்று கஷ்டப்பட்டு இகை ஒத்திகை செய் திருக்கிமூர்கள், என்பதில்ை மாத்திரம், உங்கள் மனம் சந்தோஷமடைவதானால், தாங்கள் பார்க்கலாம் இதை. நான் கட்டாயமாய் இக் கூத்தைக் கேட்கிறேன். பேதமையானது கடமையைச் செலுத்துவதால்ை