பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ. ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்-1 இவனுடைய உபாத்தியாயர்-சுக்குமி, ளகுதி, பிலி என்று பிரிக்கக் கற்பித்திருக்க வேண்டும். அர்த்தத்தை அறியாது எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கும் பள்ளிக்கூடத்துப் டையன் போல் படித்து விட்டான். பிறகு என்ன? பெருமீசன், திரிசூலி, மண்சுவர், நிலாவெளிச்சம் சிங்கம் வருகிருர்கள். கனவான்களே ! இது என்ன காட்சி யென்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடும். ஆயினும் உண்மையை உரைத் திட்டால் அந்த ஆச்சரியம் போய்விடும். இவனே அறிய விரும்பினால் இவன் பெருமீசன்தான். கட்டழகியாகிய திரிசூலி கட்டாயமாய் இவள்தான். கல்லும் மண்ணும் கையில் வைத்திருக்கும் இம்மனிதன் மண் சுவர் காதலனேயும் காதலியையும் கருணையின்றி பிரித்த குட்டிச்சுவர். இந்தக் குட்டிக் சுவரில் ஒரு துவாரமிருக்கிறது அதன் வழியாக காதலர்கள் பேசவேண்டி வருகிறது இதைக்கேட்டு நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது ஏனென்ருல் எங்களுக்கு வேறு வழி கிடையாது. முயலேயும் விளக்கையும் வைத்துக்கொண்டிருக்கும் இவன் நிலா சந்திரன்-நாயனர் சமாதியருகில் காதலர் கள் சந்திக்கச் செய்தார்கள் தந்திரம். இந்த பயங்கரமான மிருகம் ஒரு சிங்கம் அது முதலில் வந்த திரிசூலியை செய்தது பங்கம் அவள் ஓடும்பொழுது அவிழ்ந்து விழுந்தது. அவள் முக்காடு அதைச் சிங்கம் வாயில்ை கிழித்து செய்தது ரத்தக்காடு. பிறகு காதலனாகிய பெருமீசன் அங்கே வருகிருன். காதலியின் துணியில் ரத்தம் படிந்திருப்பதைக் காண் கிருன், உடனே வருத்தப் படுகிருன் தன் கத்தியை உருவுகிருன்.