பக்கம்:மொழியைப் பற்றி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின்

யற்ற வாழ்வும் - பிற மொழித் திணிப்பும் மிகவும் வருந்தத்தக்கது. உலகின் ஆறில் ஒரு பங்காகிய உருசியாவில் இலெனினின் மொழிக் கொள்கை வெற்றி பெற் றது. அவருடைய சீர் சார்ந்த கருத்தையொட்டி ஏனைய பொதுமை நாடுகளும் இன்று உலகுக்கு வழிகாட்டி வருகின்றன.

இந்தியாவும் - குறிப்பாக இந்தியத் தமிழக மும் மக்கள் அறிவாற்றலுக்கும், வாழ்க்கை மேம் பாட்டுக்கும் இலெனினின் மொழி பற்றிய கருத்து களை மேற்கொண்டால் எவ்வளவோ சிக்கல்கள் தீர்ந்து இங்கும் ஒரு புத்துலகம் தோன்றும் - பொதுமை அறம் நிலைக்கும். பல்வேறு நாகரிகபண்பாட்டு மக்களிடை உயர்வும் ஒற்றுமையும் ஏற்படும்.

மொழியைப் பற்றி இலெனின் பல்வேறு காலத்தில் - நிலையில் எண்ணிச் செயல்படுத்திய கருத்துகளை என் அன்புக்குரிய த. கோவேந்தன் தமிழில் மிக மிகத் தெளிவாகச் சுருக்கித் தந்துள் ளார். இங்குள்ள எழுத்தாளர்கட்கும் கல்வி யாளர்க்கும் அரசியலிடுபாடு கொண்ட அனை வருக்கும் புத்துணர்ச்சியையும் புத்தெழுச்சியை பும் இந்நூல் ஊட்டும் என்பது உறுதி. பாவேந்த ரின் தமிழியகத்திற்குப் - பாவேந்தரின் மரபில் வந்தவர் தந்த விளக்கக் கையேடாகும் இது. தமிழர் இந் நூலால் பயன்பெற விரும்புகிறேன். "தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் பெறத் தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால் போய்விடும் கல்லாமை : இங்கதன்பின் - பிற புன்மொழிகள் வந்து சேரட்டுமே ! - பாரதிதாசன்

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/13&oldid=713810" இலிருந்து மீள்விக்கப்பட்டது