பக்கம்:மொழியைப் பற்றி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னீடு இலெனின் ! இந்த நான்கு எழுத்துப் பெயர் மனித சமுதாயம் என்றும் மறக்க முடியாத பெயர். அவர் உருசியாவிற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்பவர் ஏன் பிறந்தோம் - எப்படி வாழ்வோம் - இருப்பதைவிட சாவதே மேல் என்று ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு வழிகாட்டித், தலைமை ஏற்றுத், தன்னலமற்ற தொண்டு புரிந்து எல்லோருக்கும் புதுவாழ்வு தேடித் தந்தவர் இலெனின். அவர் எந்த அளவிற்கு மொழி' யைப்பற்றிச் சிந்தித்துத் தெளிவான கருத்துகளைத் தெரிவித் திருக்கிருர் என்பதை அவர் பேச்சு எழுத்துத் தொகுப்பு நூல் களிலிருந்து அறிய முடிகிறது. மொழியின் சிறப்பையும், மொழியின் வளர்ச்சியையும், மொழிக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பையும், அரசியல் போராட்டத்திற்கும் மொழிக்கும் உள்ள ஈடுபாட்டையும் பல நூல்களில் இலெனின் தெளிவுபடுத்திருக்கிருர். உலகில் புதிது புதிதாக மலரும் நல்ல வல்ல கருத்துகளைக் கண்டறிய, மொழி அறிவு வேண்டும். மேலும் உலகில் உள்ள மொழிகளைக் கற்பதன் மூலமே, நல்ல சிந்தனை ஆற்றலைப் பெற்றிட இயலும். மெய்மையியத்தோடு உரையாடும் திறமையையும் மொழி அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலமே பெற்றிட முடியும். இலெனின் பல்வேறு வளமான உலக மொழிகளைக் கற்றவர். அவர் கிரேக்க மொழி பயின்றார். அதன் மூலம் பெற்ற அறிவைப் பயன் படுத்தினர். இலெனின் புரட்சிப் பாதையைக் கொண்ட நேரத்தில், செருமன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழி பற்பலவற்றைக் கற்று, ஐரோப்பிய நாடுகளில் நடை பெற்ற உழைக்கும் வகுப்பினர் போராட்டங்களைப்பற்றி தெரிந்து கொண்டார். உக்ரேனியன், போலிசு, பல்கேரியன் என அவர் கற்ற மொழி கள் பல; அதனல் அவர் அறிவு வளமானது. அதன் விளைவாக அவரின் சிந்தளை ஆற்றல் உயர்நிலை பெற்றது.

மொ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/19&oldid=713816" இலிருந்து மீள்விக்கப்பட்டது