பக்கம்:மொழியைப் பற்றி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 21.

செய்து, வீழ்த்தியதற்கு - அவர் பயன்படுத்திய பெரிய படைக் கலங்கள் - அவரின் நாவன்மையும், எழுத்து வன்மையும்தாம். அவர் வாழ்ந்த வாழ்வு மதிப்புக்குரியது. பல அரிய உண்மை களை, வினைப்பாடுகளைக் கண்டு நாம் பெரும்பயன் பெற்றிட வேண்டும். - குறிப்பாக அவர் உருசிய மொழி வளர்ச்சிக்கும், அதன் மேன் மைக்கும், வளத்திற்கும் ஆற்றியுள்ள அரும்பணி ஈடு இணை இல்லாதது. தாய்மொழிப் பற்று நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்டும் கவலைப்படாத மக்களுக்கும், பிற மொழி மீது போலி வேட்கை கொண்டு கெட்டு வரும் மக்களுக்கும், அடிமை நிலைக் காரண மாக வேற்று மொழி. திணிக்கப்பட்டுத் தாய்மொழியைக் காத் திடத் தவிக்கும் மக்களுக்கும், ஆதிக்கவாணர்களின் மொழி திணிக்கப்படுவதைக் கண்டித்துத் தாய்மொழியைக் காத்திடத் தவிக்கும் மக்களுக்கும், பேரறிஞர் இலெனின் வழிகாட்டி யாவார். எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், தங்கள்தங்கள் பொறுப்பை நன்கு உணர அவரின் மொழி இயல் செயற் பாடுகள் முன்னோட்டமாய் அமைந்துள்ளன. எந்த மொழியில் பேசினால் என்ன, எந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் என்ன, மக்களின் கைத்தட்டல் கிடைத்தால் போதும் என்று வாய்ப்பந்தல் போட்டு வாழ்பவர்களுக்கும், எப்படி எழுதினால் என்ன - பணமும், பெயரும் கிடைத்தால் போதும் என்று கருதும் எழுத்தாளர்களுக்கும், வழிகாட்டியாக அமைந்துள்ளன இலெனினின் மொழிப்பற்றும் தொண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/23&oldid=713820" இலிருந்து மீள்விக்கப்பட்டது