பக்கம்:மொழியைப் பற்றி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 23

தில்லை என்பதை நாமே உணர்கிறோம்’ என்றும் இலெனின் குறிப்பிடுகிறார்.

- 责 மனிதனின் அறிவையும், உள்ளத்தின் உறுதியையும் ஒன்ருக ஒரு பக்கம் மதித்து, இயற்கையின் இன்றியமை யாமையை மற்றொரு பக்கம் எடுத்துக்கொண்டு தெளிவான விளக்கங்கள் தராமலே, இயற்கைக்கு முதலிடமும், மனிதனின் அறிவிற்கும் உறுதிக்கும் இரண்டாவது இடமும் தருகிறார் ஏங்கில்சு. - ஆனால், மாந்த்ரின் அறிவும், உள்ளத்தின் உறுதியும், இயற்கைக்குக் கட்டுப்பட்டே அமைந்திட வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை", என்று இலெனின் உலகியம் பற்றி கூறும்போது தெளிவாக ஏங்கில்சு கருத்தை விரிவாக விளக்கம் கூறித் தெளிவுபடுத்துகிறார் இலெனின்.

எண்ண்ங்கள் - பொருள்கள் இரண்டும் உண்மையானவை. ஏன் என்றால் அவை இரண்டும் காணக்கூடியவை. ஆனால் 'எண்ன்ங்கள்தாம் பொருள்கள் என்று கருதுவது தவறானது. அப்படித் தவறான் கண்ணோட்டம் கொள்வதால் குழப்பம் உண்டாகும். குறிக்கோள்களுக்கும், உலகியலுக்கும் உள்ள உண்மையான குண்ங்களைப் புரிந்துக்கொள்ள இயலாது போகும், - - -

மாந்த்ரின் நின்ன்ைவுகளும் - பொருள்களும் காணக்கூடியன வாக உள்ளன என்று தையட்சின் சரியாகவே ஓர் இடத்தில் தெளிவுபடுத்தி யிருக்கிறார். எண்ணுவது உடலின் வேலை - எண்ணுவதற்கு ஒரு பொருள் இருந்தாக வேண்டும். அந்தப் பொருள் சிந்தனைக்குக் கருவியாகப் பயன்பட வேண்டும். அப்படிப்பட்ட பொருள்களை நமக்கு வாழ்க்கையிலும், இயற்கையிலும்தான்் கிடைக்கின்றன. சிந்தனை மூலம் கிடைப்பது பொருள். அந்தப் பொருளுக்கு அப்பால் எதையும் காண இயலாது. எனவே, மேற்கொண்டு அந்தப் பொருளைப் பற்றிச் சிந்திக்கவும் இயலாது. ஒரு பொருளைக் கானும்போது தான்் அது சிந்தனைக்குக் கருவியாகிறது. ஆனால் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/25&oldid=713822" இலிருந்து மீள்விக்கப்பட்டது