பக்கம்:மொழியைப் பற்றி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 39

3,315,443 பேரில் 388 பேர் மட்டுமே அந்த இரண்டு மொழிகளைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் அவர்கள் ஒரே ஒரு விழுக்காடுதான்். அங்குப் போர்க்களத்தில் உள்ள அதிகாரிகள் உள்பட அனைவரும் அவரவர் தம் தாய்மொழியில் பேச உரிமை வழங்கப் பட்டிருக்கிறது. இதனால் சுவட்சர்லாந்தின் நடைமுறை அரசியலில் நாட்டின் அமைதி நன்கு பாதுகாக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். மக்கள் ஆட்சி சீராக இயங்கி வருவதையும் கண்டு வரு கிறோம். இனங்கள் பல இருப்பினும், அவர்களிடையே சமநிலை நிலவி வருகின்றது. ஒவ்வோர் இனத்திலே இருக்கும் ஒவ்வோர் ஏழைத் தொழிலாளியும் ஒறறுமைக்குப் பாடுபட முடிகிறது. தேச ஒறறுமை நிலைக்கிறது. நாடு நலம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாறாகத் தேசியப் பண்பாட்டு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பது, நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துப் பலவேறு இனங்களையும வேறுபடுத்தவே பயன்படும்’ என்று இலெனின் சிறுபான்மையினராக இருப்பவர்களின் மொழியைப் புறக்கணிககக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டு கினறார். ஆட்சிமொழிக் கொள்கை நாட்டின் முன்னேற்றத் திறகு உதவியாக அமைப்பது என்பதைத் தெளிவாக்கியிருக் கிறார். ஆட்சிமொழி பிற மொழியினர் மீது திணிப்பதன் மூலம் நாட்டின் ஒறறுமை சீர்குலையும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். ஒரு மொழி முதன்மை மொழியாகவும், மற்ற மொழியினரை அடிமைகளாகவும் ஆக்கிடும் சூழ்நிலையை உண்டாக்குவது நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் இடர்ப்பாடானது எனபதை இலெனின் கூறியிருப்பதை, நாட்டு நலனை விரும்பிச் செயல்படுபவர்களுக்கு நல்ல பாடமாக அமைத்துக் கூறி இருப்பது எல்லோரும் மனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/41&oldid=713838" இலிருந்து மீள்விக்கப்பட்டது