பக்கம்:மொழியைப் பற்றி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மொழியைப் பற்றி...

பேசவும் எழுதவும் உரிமை அளிக்கப்பட வேண்டும். ஆட்சி மொழிக்கு உரிய நிலையைப் பிற மொழிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு உரிய வழி ஒரு குறிப்பிட்ட மொழியை மற்ற மொழியினர் மீது ஆட்சி மொழியாகத் திணிப்பது கூடாது. ’’ நாட்டில் உள்ள பல்வேறு மொழியினர் அவரவர்களுடைய மொழிகளின் வளர்ச்சிக்காகப், பாதுகாப்புக்காக உரிய தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்று இலெனின் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினர் பேசும் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பிற மொழி பேசும் பெரும்பான்மையினர் மீது திணிப்பது கூடாது என்று குறிப்பிட்டு இருப்பதை உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மொழியினர் ஆட்சிமொழி பற்றி சரியான கொள்கையை வகுத்துக்கொள்ள இலெனின் வழிகாட்டியுள்ளார்.

உருசிய மன்னர் சாரின் கொடுமைகள் தாங்க முடியாத நிலையில் பல்வேறு தேசிய இனங்கள் பல ஆண்டு காலம் தாங்கிப் பொறுத்து வந்ததின் விளைவாக மன்னர் ஆட்சி முறையைப் பற்றியே மக்கள் வெறுப்புக் கொள்ளவேண்டிய தாயிற்று. அவரவர்களுடைய தாய்மொழியை உருசிய மக்கள் முழு உரிமையோடு பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் அல்லலுற்றுக் காலப்போக்கில் கல்வி அறிவு இல்லாத வர்க்ளாகி விட்டார்கள். மன்னர் ஆட்சியில் தாய்மொழிப் பற்றுக் குறைந்துவிட்டது.

மொழிகளைப் பொறுத்தமட்டில் அனைத்து மொழிகளுக் கும் சமநிலை இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழிகளை விடத் தனிப்பட்ட முன்றையில் உயர்ந்த நிலை பெற்றிருப்பது கேடு பயக்கும். நல்ல அரசு எல்லா மொழியினருக்கும் மொழி பெயர்ப்பாளர் மூலமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பையும் வசதியையும் உண்டாக் கித் தரவேண்டும். இது மிகமிக இன்றியமையாதது. மொழியைப் பொறுத்தமட்டில் அனைத்து மொழிகளும் சமமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/46&oldid=713843" இலிருந்து மீள்விக்கப்பட்டது