பக்கம்:மொழியைப் பற்றி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 47.

இலெனின் கூறியிருக்கும் மதச்சார்பற்ற அரசின் கொள்கை யைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம். எப்படி ஒரு மனிதனுக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதோ அதேபோல எண்ண உரிமையும் இருக்க வேண்டியதன் இன்றியமையாமையையும் வற்புறுத்தி இருக்கிறார். சிந்தனையின் தொடர் எண்ணம். எண்ணத்தின் அடிப்படை யில் ஒரு குடிமகன் நன்கு ஆராய்ந்து, தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று முடிவாகக் கூறவோ, தனக்கு எந்த மதமும் தேவை இல்லை என்று முடிவு செய்து செயல்படவோ உரிமை உண்டு என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். மதச்சார்பற்ற அரசு என்ற போலியான அறிக்கை செய்து கொண்டு, யார் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள், தங்களுக்குப் பிடித்தமான மதத்திற்கு மட்டும் அரசின் துணை இருக்கும் வகையில் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தெரிந்தும் தெரியாதவர்போல மதச்சார்பற்ற கொள்கையைக் கற்பழிக்கும் மதவாணர்கள், வெறியர்கள் - உண்மையான மதச்சார்பற்ற கொள்கையை இனியாவது புரிந்துக்கொண்டு, திருந்தி, நல்வழிப்பட இலெனின் கூறிய கருத்துகள் பயன்படும் என்று கருதுகிறோம்.

女 உடோபியா - என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்.’, உ என்றால் இல்லை என்று பொருள். டோபியா என்றால்

ஓர் இடம் என்பது பொருள். அதாவது இல்லாத ஓர் இடத்தைக் காணாத (கற்பனை உலகு) ஒர் இடத்தைப் புனைவு. செய்து கொள்வதாகும்.

அரசியலில் உடோபியா என்ற சொல் வேறு வகையாக (நடை முறைக்கு ஒவ்வாத) பயன்படுத்தப்படுகிறது. அதாவது எது ஒன்று நடைபெறாதோ அதனைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. அதாவது மக்கள் சமூகத்திற்குப் பயன்படாத நிலை யைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகுப்பாற். றல்களுக்கும், வளர்ச்சி பெற்ற அரசியல் நிலைக்கும் இந்தச்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/49&oldid=713846" இலிருந்து மீள்விக்கப்பட்டது