பக்கம்:மொழியைப் பற்றி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 57

மக்களுக்குப்பயன்படும் அருஞ்செயல்களுக்கு இந்தத் தகவல்கள் பயன்படா. என இலெனின் குறிப்பிடுகிறார். சான்றுகள் எப்படிப்பட்ட வையாக இருக்கவேண்டும் என்பதையும், எப்படிப்பட்ட சான்றுகள் தரப்பட்டால் மக்கள் நம்பவேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

大 * மக்களிடம் பேசும்போது இலத்தீன் மொழிச் சொற்களை நீக்கி எளிதாகப் புரியும்படியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று இலெனின் ஒரு மொழியில் பிறமொழி சொற்களைப் பயன்படுத்தும் செயலைக் கண்டித்து, உருசிய மக்களுக்குத் தங்கள் மொழி மீது பற்றுதல் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறார். தாய் மொழியில் உள்ள சொற்கள் மக்கள் எல்லோரும் புரிந்துக் கொள்வதற்கு எளிதான்து என்பது அவரின் கருத்து.

மேடைப் பேச்சாளர் தமக்குப் பிறமொழிகளும் தெரியும் என் பதை காட்டிக்கொள்ள மட்டுமே பிறமொழிச் சொற்கள் பயன் தருமே ஒழிய அந்தப் பேச்சின் மூலம் மக்கள் பேச்சின் கருத்தை முழுமையாகக் கண்டுகொள்ள இயலாது என்பதை நாம் உணர வேண்டும். மேலும் சொற்பொழிவுத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் நடையை எளிதாக அமைத்துக்கொண்டால் எந்தக் கருத்தை யும் மக்கள் மனத்தில் பதிய வைத்துவிட் இயலும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அவன் பேசிய பேச்சு உள்ளத்தைத் தொடுவதாக, உணர்ச்சி நிறைவுடன் இருந்தது. அதற்கு ஒரு சிறப்புக் காரணம், அவன் எந்த ஏட்டையும் படித்தவன் அல்லன். புத்தகங்களைப் படித்து அவன் பேசவில்லை. இருந்தும் அவனால் புரட்சியை எப்படி உண்டாக்க முடிந்தது என்பதை மிக அழகாக எடுத்துக் கூறினான்’’ என்று ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து, எவரும் நன்கு சிந்தித்தால், எதனையும் தன் சொந்த நடையிலேயே தெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/59&oldid=713856" இலிருந்து மீள்விக்கப்பட்டது