பக்கம்:மொழியைப் பற்றி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மொழியைப் பற்றி....

என இலெனனின் முதலாளிகள் நடத்தும் செய்தித் தாள்களி னால் மக்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பையும், முதலாளிகள் பெறும் கொள்ளை ஆதாயத்தையும் அழகாக விளக்கி இருக் கிறார். மேலும், எந்தச் சிக்கலை எப்போது வலியுறுத்திப்பேசவேண்டும் செய்யவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டு வருகிறோம். தேவையில்லாமல் வேற்று மொழிச் சொற்களைப் பயன் படுத்தி வருகிறோம். மேலும் அந்தச் சொற்களைக்கூடச் சரியாகப் பயன் படுத்துவதில்லை. அந்த வேற்றுமொழிச் சொல்லுக்கு ஈடாக அதே பொருளைக்கொண்ட சொற்கள் நமது உருசிய மொழியில்

இருந்தும் கூட பலர் அதனைப் பயன்படுத்துவது இல்லை. * புதிதாக ஒருவன் படிக்கக் கற்றுக்கொண்டால் அதிலும் குறிப் பாகச் செய்தித் தாள்களைப் படிக்கக் கற்றுக் கொண்டால் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏட்டாளரின் நடையை, அவர்கள் பயன் படுத்தும் சொற்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வேற்றுமொழிச் சொற்களால் செய்தி ஏட்டின் மொழி கெடுக்கப்படுகிறது. புதிதாகப் படிக்கத் தெரிந்து கொண்டவன் பிறமொழிச் சொற்களைப் படிப்பதின் மூலம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், அது அவனுடைய குற்றமில்லை. அந்தக் குற்றத்துக்குக் காரணமாக இருக்கும் எழுத்தாளனை மன்னிக்க முடியாது. இப்படி வேற்றுமொழிச் சொற்களைத் தேவையில்லாமல் கையாளுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும் ?

வேற்றுமொழிச் சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத் தப்பட்டு வருவதைக் கண்டு நான் மிகவும் மனம் நோகிறேன். அதிலும் சில ஏடுகளில் தவறுதலாகக் பயன்படுத்துவது எனக்குச் சீற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உருசிய மொழி சிதைவு அடைகிறது ; எனவே உருசிய மொழியைக் கெடுப்பவர்கள் மீது போர் தொடுக்க நேரம் வந்துவிட்டது என்று நான் கருதுகிறேன்.' இலெனின் தாய்மொழிப் பற்றுடன் உண்மைகளை எடுத் துரைத்திருப்பது காண வியப்பாகப் பலர்க்குப் புலப்படும். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/62&oldid=713859" இலிருந்து மீள்விக்கப்பட்டது