பக்கம்:மொழியைப் பற்றி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 75

நமது மொழியைக் காத்திடுவோம். உருசிய மொழி மிகவும் போற்றுதலுக்கு உரியது. அது நமக்குக் கிடைத்த செல்வம். நம் முன்னேர்களால் நமக்குத் தரப்பட்ட நல்ல முதலீடு. அந்த ஆற்றல் வாய்ந்த படைக்கலத்திற்கு உரிய நன்மதிப்பைத் தருவோம். -

- இவான் துர்கநேவ்

மொழியை வளமாக்க பிறமொழிச் சொற்களைக் கையாள்வது உண்மையிலேயே மொழியை வளமாக்குவதன்று. அது ஒரு மொழியைக் கெடுத்துச் சீர்குலையச் செய்வதாகும்.

. ஏ. எசு. சுமரகோவ்

உருசிய மொழி போதிய அளவிற்கு வலம் பெற்றுத் திகழ்கிறது பல்வேறு பொருள்களையும், வகை வகையான உணர்ச்சிகளை யும், உருசிய மொழியைக் கொண்டே பல்வேறு வழிகளில் செய்

திட முடியும்.

- விலாடிமீர் கோலென்கோ.

பிறமொழிச் சொற்கள் பொருத்தமானாவை என்றோ, நல்லது என்றோ, நான் கருதவில்லை. தூய உருசியச் சொற்கள் இருக் கும் போது அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமது சிறந்த மொழி, நமது வளமான மொழியை அழிவிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.

பிறமொழிச் சொற்கள், அடிக்கடி தேவை இல்லாமல் உருசிய வெளியீடுகளில் புகுத்தப்பட்டு வருவது வேதனைக்கு உரியது. அதிலும் உருசிய தேசிய முன்னேற்றத்திற்காகவும், நம் தேசிய கோரிக்கைகளுக்காகவும் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் வெளியீடுகளிலேயே இந்தக் கேட்டுச் சூழல் காணப்படுகிறது.

- நிகலாய் இலெஸ்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/77&oldid=713874" இலிருந்து மீள்விக்கப்பட்டது