பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மொஹெஞ்சொ - தரோ


(Superficial enquirers) நினைத்தனர். அவர் நினைப்புக்கு மாறாக இன்றுள்ள பேச்சு வழக்கில் உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் திராவிடக் கிளை மொழிகளே என்பது உண்மை ஆராய்ச்சியாளர்க்கு நன்கு விளங்கும்”.[1]

“திராவிடப் பகுதிகள் (Roots) மிகப் பழைய காலத்தில் ஒரசை உடையன (Mono syllabic) ஆகவே இருந்தன. பின்னர் அவை வேறு பல சொற்கள் சேர்ந்தமையால், நீண்ட சொற்கள் ஆயின; பல சொற்கள் சிதைந்து, இன்று ஒரு பகுதியாகத் தோற்றமளிப்பனவும் உள”.[2]

“வடமொழியும் பாலி மொழிகளும் அசோகனுக்கு (கி.மு.275க்கு) முன்னரே திராவிட ஒசைகளை ஏற்றுக் கொண்டு விட்டன. சிந்து வெளியிற் கிடைத்த முத்திரைகளில் உள்ளவை பெரும்பாலும் ஒரசைக் சொற்களாகவே (Mono syllabic) காணப்படுகின்றன. எனவே, இந்த ஓரசைச் சொற்களைக்கொண்ட மொழியே சிந்துவெளியில் பேசப்பட்டதாகும். அம்மொழி எதுவாயினும் சரி, வடமொழியாகவோ, செமைட்டிய மொழியாகவோ இருத்தல் இயலாது என்பது உண்மை”.[3]

(1) சிந்துவெளியை அடுத்த ப்ராஹுயி மொழியில் பேரளவு திராவிட மொழி கலந்துள்ளது; (2) ஹைதராபாத் சவக் குழிகளிற் கண்டறியப்பட்ட மட்பாண்டங்கள் மீது உள்ள எழுத்துக் குறிகள் சிந்து வெளியிற் கிடைத்தவற்றையே ஒத்துள்ளன; (3) சிந்து வெளியிற் கிடைத்த மண்டை ஒடுகளிற் பல மத்திய தரைக் கடலினரையே குறிக்கின்ற்ன. இக்காரணங்களால் ஆரியர் வந்த போது சிந்துவெளியில் இருந்தவர் திராவிடர் என்பதே தோன்று.


  1. P.T.S.Iyengar’s ‘The Stone Age in India’, pp. 1943-46.
  2. Dr.Caldwell’s ‘Comparative Grammarofthe DL, pp. 196-197.
  3. Dr.G.R.Hunter’s ‘The Script of Harappa and Mohenjo-Daro’ (1934) pp.51, 128.