பக்கம்:ரமண மகரிஷி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ரமண மகரிஷி




புற்றுநோய் என்றால் ஓரிடத்தில் மறைந்தால், அது மற்றோர் இடத்தில் தோன்றும். ரமண மகரிஷிக்கு வந்தது அதுபோன்ற புற்று நோயல்ல என்று கண்டு பிடிக்கப்பட்டது. அப்படியானால் இந்த நோய் வந்த இடத்திலேயே திரும்பத் திரும்பக் கட்டி உருவில் பெரியதும் சிறியதுமாக மாறிமாறிவரும். கையை எடுத்து விட்டால் கட்டி திரும்ப வராது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், ரமண மகரிஷி ஒரு முறை கூறிவிட்டால் அதை யாரும் மாற்ற முடியாது. அவ்வளவு பிடிவாதக்காரர் அவர். எனவே, டாக்டர்களுக்கும் பக்த கோடிகளுக்கும் பேசாமலிருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை.

ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளால் ஒருவேளை ரமணர் நோய் சுகமானாலும் ஆகலாம் என்று சிலர் எண்ணினார்கள் அதற்கேற்ப பச்சிலைகளை வைத்துக் கட்டிப் பார்த்தார்கள். அந்த ராட்சச நோய் வருவதும், மறைவதும், திரும்பவும் வருவதுமாக கண்ணாமூச்சியாட்டம் ஆடிக் கொண்டே இருந்தது.

குருவின் இந்த நிலைமை கண்டு வேதனைப்பட்ட ஆன்மீக மாணவர்களுள் ஒருவர், மனோ சக்தியால் நோய்களைத் தீர்த்து வைக்கும் நீங்கள், எங்களுக்காக ஏன் அவ்வாறு செய்யக் கூடாது. என்று கேட்டார்!

ஆனால், நோய் குணமடைய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், அதை அப்படியே விட்டு விடுவது என்ற முடிவிற்கு அவர் வந்து விட்டார் என்று தெரிந்து விட்டது.

மாறிமாறி வந்த கட்டியின் கொடுமை ரமணமகரிஷியின் உடலைத் தின்று தின்று பலவீனப்படுத்தி விட்டது. இந்த நோய் சுகமாக, எந்தெந்த வகையான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தும், பல முறை அறுவைச் சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் குணமாகும் நிலையிலில்லை.

1960-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் நாள் ரமணமகரிஷியின் நோய் மிக மோசமானது. அருளாளர் ரமணரிடம் அருளாசி பெற்றிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/104&oldid=1280185" இலிருந்து மீள்விக்கப்பட்டது