பக்கம்:ரமண மகரிஷி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ரமண மகரிஷி


இடையே நாணயமானவர், நேர்மையானவர் என்ற நல்ல பெயரைப் பெற்றார். அதனால், அவ்வூர் சிறு கிராமமாக இருந்தாலும், அங்கே அய்யர் குடும்பத்திற்கு நல்ல பெயரும் புகழும் இருந்தது.

திருச்சுழி சுந்தரமய்யர், எப்படியோ சட்ட நூல்களை அரும்பாடுபட்டுத் தேடி, அவற்றை நன்றாகப் படித்து சட்டக் கல்விமான் ஆனார். அதனால் அவர் வழக்குரைஞர் என்ற பெயரைப் பெற்று திறமையான, நுட்பமான, நன்றாக வாதாடக் கூடிய, வல்லமையுடைய, எதிரியை மடக்கித் திணறடிக்கக் கூடிய வழக்கறிஞரானார். வெள்ளம் போல் பெருகி வரும் வருமானத்தைக் கண்டு அவரது ஏழ்மைப் பறந்தோடியது. மூதேவி ஓடினாள்; சீதேவி அழகம்மாளுக்குத் தோழியானாள்! வருமானம் வலுத்தது; உயர்ந்தது. கிராமப் பெரும் புள்ளிகளுள் ஒருவரானார் அவர்.

இவ்வளவு பெரிய பணம் தன்னை நாடி வந்துவிட்டதால், அவர் ஆணவக் காரராகவோ, அகந்தையராகவோ அல்லாமல், பழைய தரித்திர நாட்களை எண்ணியெண்ணி அந்தக் கொடுமைகளை நெஞ்சிலே நிறுத்தி அச்சத்துடனேயே வாழந்தார்.

அவரைத் தேடி, வரும் பஞ்சை பராரிகளுக்கும், ஏழை எளிய கிராமவாசிகளுக்கும் தவறாமல், தாராளமாக, உதவிகளைச் செய்து வந்தார் அதனால் திருச்சுழி கிராம வட்டாரம் மட்டுமன்று, பாண்டி நாட்டைச் சுற்று முற்றுமுள்ள நகர, கிராமங்களுக்கு எல்லாம் சுந்தரமய்யர் ஒரு வள்ளலாகவே வாழ்ந்து வந்தார்.

கொடையாளி என்ற பெயரைப் பெற்ற அவருக்குள்ள சிறப்பு என்ன தெரியுமோ! கொள்ளையடிப்பவர்களும், கிராமத் திருடர்களும், ஒழுங்கற்ற போக்கிரிகளும் கூட, சுந்தரமய்யர் வீட்டிற்குக் கொள்ளையடிக்க, வம்படி சண்டைகளுக்கு வருவதில்லையாம்! இதைவிடச் சிறப்பு என்னவென்றால், அந்தச் சமுதாய விரோதிகள் கூட, ‘சுந்தரமய்யரும், அவரது குடும்பமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/12&oldid=1280077" இலிருந்து மீள்விக்கப்பட்டது