பக்கம்:ரமண மகரிஷி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ரமண மகரிஷி


இப்போதும் அவர், அருணாசலத்திற்கு வருகை தந்து பூந்தோட்டம் என்ற எழில் ததும்பும் குடிலில் தங்கியிருந்தார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. என்ன அதுவெனில், குன்றக்குடி மடாதிபதிக் குழுலினரின் ஆதிகுரு எனப்படும் ஒரு சந்நிதானம் சமாதியானது அந்தப் பூந்தோட்டத்திலே தான். அந்த இடத்திற்கு குருமூர்த்தம் என்று இன்றும் பெயர். அதன் காரணமாகத்தான் குன்றக்குடி திருவண்ணாமலை வந்தாரென்றால் அங்கே உள்ள பூந்தோட்டக் குடிலிலே தங்குவது வழக்கமாகும்.

தம்பிரான் தம் குழுவினருடன் திருவண்ணாமலை நகரிலே உள்ள முக்கியமான தெருக்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வருவார். அவ்வாறு கிடைக்கும் பிச்சையினைத் தம்பிரானுடன் வருகைத் தந்தோர் அனைவரும் கட்டுப்பாடாகக் குரு பூஜை செய்து விட்டுத்தான் உண்பார்கள்.

அந்த அண்ணாமலைத் தம்பிரான், மரத்தடியில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பால்போகியைப் பார்த்து, இவ்வளவு சிறு வயதில் ஒரு பையன் துறவியாக மாறி தியானம் புரிகிறானே. இது பூர்வ ஜென்ம பலனோ என்றெண்ணி வியந்தார். அதனால், அந்த இளந்துறவியின் அருகே அமர்ந்து, சிறிது நேரமானவுடன் அவர் எழுந்து போய் விடுவார்.

இவ்வாறு அத் தம்பிரான் தினந்தோறும் வந்தமர்ந்து செல்வதை நிறுத்திவிட்டு, இந்த பால சந்நியாசியைத் தமது குருமூர்த்தத்துக்கே அழைத்துச் சென்று தங்க வைத்தால் என்ன என்று எண்ணி, அங்கே வந்துவிட்டால் அவருடைய தவநிலைக்கு எந்தவிதத் தடையும் ஏற்படாதே என்ற எண்ணத்தால், தனது கருத்தை இளம் துறவவிக்குத் தெரிவித்தார்.

பிராமண சாமியாரான அந்த வெங்கட்ராமன் தம்பிரான் கருத்தை ஏற்றுக் கொண்டார். அவர் குன்றக்குடி மடமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/54&oldid=1280739" இலிருந்து மீள்விக்கப்பட்டது