பக்கம்:ரமண மகரிஷி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ரமண மகரிஷி




அருகிருந்தவரின் வார்த்தைகள் ரமணரின் நெஞ்சை உருக்கிற்று. பேச வேண்டாம் சுவாமி, எழுதிக் காட்டுங்கள். அதுவே அம்மாவுக்குரிய பாசப் புதையலாகவும் இருக்கும் என்றதைக் கேட்ட ரமணர், கீழ்க்கண்டவாறு எழுதித் தன் தாயின் கையிலே கொடுத்தார்.

“உயிரின் வினை வழியேதான் கடவுள் அவனை நடத்துகிறான். என்ன முயன்றாலும், நடக்க முடியாததை நடக்கும்படிச் செய்ய முடியாது. இது முற்றிலும் உண்மை. எனவே மௌனமாக இருப்பதே அறிவுடைமை” என்று பகவவான் ரமணர் தனது தாயாருக்கு எழுதிக் கொடுத்தார் ஒரு தாளில்!

அன்னை அதைப் படித்தாள்! அவளுடைய அன்பு வேதனை அல்லாடியது. குறை குடம் போல் ஆடித் தத்தளித்தது! மனம் தளும்பிக் கொண்டே அடைக்குந்தாழ்க்கு உண்டோ தாள்? என்று ஏங்கி எண்ணியபடியே மூத்த மகனோடு மதுரை திரும்பினார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/70&oldid=1281080" இலிருந்து மீள்விக்கப்பட்டது