பக்கம்:ரமண மகரிஷி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ரமண மகரிஷி


கொண்டவரல்லர். அவர் எதிரிலேயே பாம்புகள் ஓடும். அதை அவர் கவனிக்க மாட்டார். அதன் வேலையை அது செய்கிறது என்று இருந்து விடுவார்.

அணில்கள், எலிகள், துரிஞ்சல்கள் அவர் மேலே தொப்பு தொப்பென்று விழும். கவனிக்கமாட்டார். குரங்குகள் அவர் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டு அவருக்கு மக்கள் வழங்கிய பழ வகைகளை உரித்து உரித்துத் தின்று கொண்டிருக்கும். பழனிசாமி சாமியார் அவற்றை விரட்டிக் கொண்டேதான் இருப்பார். இருந்தும் அந்தக் குட்டி அனுமார்கள் அவரையும் ஏமாற்ற சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்!

வெங்கட்ராம சாமியாரைச் சுற்றி காகங்கள் அமர்ந்து விரைந்து வாழைப்பழங்களைக் கொத்திக் கொண்டிருக்கும். காகக் குஞ்சுகள் அவர் காலடியிலே தத்தித் தத்தி பறந்து விளையாடும். அந்தக் குஞ்சுகளுக்குப் பாலயோகி பழங்களை ஊட்டுவார்! அவை அச்சமின்றி அவருடன் கா கா என்று கரைந்து விளையாடும்.

சுவாமிகள் விரூபாட்சிக் குகையிலே தங்கியுள்ளபோது, தமிழ்நாட்டின் பெரும்புலவர்களும், கவிஞர்களும், செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்கள் தொண்டர்களும், அரசியல்வாதிகளும் தரிசிக்க வருவார்கள். இவ்வாறு வந்த அறிஞர்களுள் ஒருவர் கணபதி முனீந்திரர் என்பவர்.

கணபதி முனீந்திரர் பெரும் புலவர் மட்டுமல்லர்; வேத, உபநிடத, ஆகம, தந்திர மந்திர சாஸ்திரக் கலைகளையும் நன்கு கற்றறிந்த வல்லவர். எல்லா நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம். குறிப்பாக, சமஸ்கிருத மொழியில் மகாபண்டிதர். திருவண்ணாமலையிலுள்ள விரூபாட்சிக் குகையில் ஓர் இளந்துறவி இருக்கிறார். மக்களுக்கு அருளாசி வழங்கி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/72&oldid=1281213" இலிருந்து மீள்விக்கப்பட்டது