பக்கம்:ரமண மகரிஷி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

85



உலகம் எவ்வாறு தோன்றியது?

எல்லாத் துறைகளிலும் நன்கு அறிவு நுட்பம் கொண்ட ஒரு வட இந்தியர், “இந்த உலகம் எவ்வாறு தோன்றியது?” என்ற வினாவைத் தொடுத்தார். அதற்கு என்ன காரணம்? என்றொரு துணை வினாவையும் கேட்டார். அதற்கு மகரிஷி அளித்த பதில்.

“உனக்கென்று சொந்தக் கவலைகள் எதுவுமே கிடையாதா?”

இருக்கின்றது. ஆகையால்தான். நான் வாழ்க்கை, இறப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.

“ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்போமா? யாருக்கு வாழ்வு? உயிர் யாருக்கு இருக்கிறது? உதாரணமாக உயிர் இருக்கிறதா உனக்கு?”

“நான், என்னுடைய உடலைப் பார்ப்பதால், நான் உயிருடன் இருப்பதாக உணர்கின்றேன்.”

“நீ, எப்போதுமே உனது உடலைப் பார்க்கிறாயா? நீ, தூங்கச் செல்லும்போது, அந்த உடலுக்கும் இந்த உலகத்திற்கும் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா?”

“அது எனக்குத் தெரியாது. மர்மமாக இருக்கிறது அது.”

“உனது உடலுக்கு என்ன நேருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தால், நீ இல்லை என்று சொல்ல முடியுமா?”

“எனக்குத் தெரியாது.”

“அப்படியானால், நீ இப்போது இருக்கிறாய் என்பதை எப்படி அறிந்து கொள்கிறாய்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/87&oldid=1281327" இலிருந்து மீள்விக்கப்பட்டது