பக்கம்:ராஜாம்பாள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி 13}

யால் அந்தப் பேச்சைத் தவிர வேறே பேச்சிருந்தால் பேசு. இல்லாவிட்டால் இப்போதே எழுந்து போய்விடு. என் ஆனக் கொலைபாதக னுக்காதே! உண்மை என்பதையே ஒரு நாளும் அறியாத குடிகேடளுகிய நடேசனுடைய வார்த்தையை நம்பி என்ன ராஜாம்பாள் பழித்ததாக நீயும் தீர்மானஞ் செய்துவிட்டாய்போல் இருக்கிறது. ராஜாம்பாள் நேரில் வந்து என்னைத் திட்டினலும் அப் போதுகூட ஏதாவது காரணம் பற்றித்தான் அவள் அப் படிப் பேசியிருப்பாளென்றும், வாஸ்தவமாக அவள் அப் படி ஒரு நாளும் சொல்லமாட்டாளென்றுந்தான் நான் நினைப்பேன். ஐந்து பேரை ஏமாற்றிய அவள் என்னையும் ஏமாற்றுவாள் என்றாயே! நீலமேக சாஸ்திரிகள் அவ ளுடைய தகப்பளுரை இம்சைப்படுத்தியதற்காக அவரை அவமானப்படுத்த வேண்டுமென்று அப்படியெல்லாம் செய்தாளே தவிர, அவரைத் தவிர, ஒர் எறும்பைக்கூட இதுவரையில் அவள் ஹிம்சித்தறியாள். - லோகசுந்தரி: அவள் மானிடப் பிறவி அல்லவென் றும், தெய்வப் பிறப்புத்தான் என்றுமே வைத்துக்கொள்ளு வோம். அவள் இறந்து போய்விட்டதால், இனி அந்தச் செத்த பேச்சைப் பேசுவதால் ஏதாவது உபகார முண்டோ? மேல் நடக்கவேண்டிய காரியங்களை யோசனை செய்யாமல் வீண்பேச்சுப் பேசுவதனால் வரும் லாபம் என்ன? -

கோபாலன்: ராஜாம்பாளைக் கொன்றவர்கள் இன் ஞர் என்று அறியுமுன் நான் வேறு யோசனை செய்யவே மாட்டேன்.

லோகசுந்தரி: சரி, நீ கொலை செய்யவில்லையென்றும், வேறொருவர் கொலை செய்ததாகவும் ருஜுவாகிவிட்ட தென்றே வைத்துக்கொள்வோம்; அப்பால் நடப்பது என்ன? -

கோபாலன்: நடப்பதென்ன? பிராணனை விட வேண்டியதுதான்.

லோகசுந்தரி: இப்போது வாஸ்தவமாக உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதென்று நிச்சயமாகிவிட்டது. மாட்சிமை தங்கிய ஆல்பர்ட் விக்டர் இளவரசர் இறந்த போதும் எவரும் அவர் கூட இறக்கவில்லையே! பூலோகந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/135&oldid=684677" இலிருந்து மீள்விக்கப்பட்டது