பக்கம்:ராஜாம்பாள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு # 63

களை வெளியே விடாமல் சரியானபடி பந்தோபஸ்தில் தங்கள் பங்களாவிலேயே வைக்க வேண்டுமென்றும் கேட் டுக்கொள்ளுகிறேன். நான் இப்படிச் சொல்லுவது, கனம் பொருந்திய ஜூரர்கள் நியாயந் தப்பி நடப்பார்க ளென்ற சந்தேகத்தினுல் அல்ல. அவர்களுடைய நன்மை யைக் கருதியே, அவர்களைக் குறித்துக் கேவலமாகிய ஒரு வார்த்தை வரக்கூடாதென்ற எண்ணத்தினுல்தான் இப் படிச் சொல்லுகிறேன். -

கியாயாதிபதி: இந்தக் கட்டத்தில் கேசை நிறுத்தி வைக்க எனக்கும் இஷ்டமில்லையாதலால், கொக்கு துரை யவர்களே! தாங்கள் தங்களுடைய கேஸின் சாராம்சங் களை எடுத்துக் கூறலாம். -

பா. கொக்கு துரை: கனவான்களாகிய ஜூரர்களே! புத்தியிற் சிறந்த தாங்கள் இந்த வழக்கு ஆரம்பமானது முதலே அதிகக் கவனமாய்ச் சாட்சியங்களை யெல்லாம் கேட்டுக்கொண் டிருந்தீர்களாதலால் கைதி குற்றஞ் செய் திருப்பானென்ற தீர்மானத்தைத் தவிர வேறு விதமான தீர்மானத்திற்கு வருவது முடியாத காரியம். இருந்தா லும், நான் சொல்லும் முக்கியமான சில விஷயங்களை மாத்திரம் தயவுகூர்ந்து கவனிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். ராஜாம்பாள் சிறு குழந்தை முதலே நற்குண நற்செய்கைகளிற் சிறந்தவளென்றும், எவரை யும் வருத்தத்திற்கு உட்படுத்தினவள் அல்லவென்றும், ஆகையால் அவளுக்கு விரோதிகளே இல்லை என்றும் தெரிகிறது. மேலும், ராஜாம்பாள் கொலைசெய்யப் பட்ட அன்று உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-வது நெம்பர் வீட்டிற்கு ராத்திரி 12 மணிக்கு ராஜாம்பாளை வரச்சொல்லிக் கைதி கடிதம் எழுதி யிருக்கிருன். அந்த இடத்தில், என் தலையை இரண்டு துண்டாக வெட்டிவிட்டாலும், கிழக்கே, உதிக்கிற சூரி யன் மேற்கே உதித்தாலும் உன்னைக் கல்யாணஞ் செய்து கொள்ளமாட்டேன்’ என்று ராஜாம்பாள் சொன்ன தைச் சாமி நாயுடு கேட்டார். மேலும் அந்த இடத்தில் தேடிப் பார்த்ததில், மோசம் போனேன்; கோபாலன் என்னைச் சுடலைமாடன் கோவில் தெரு, 29-வது தெம்பர் வீட்டிலுள்ள குதிலில்’ என்று ராஜாம்பாள் கைப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/167&oldid=684709" இலிருந்து மீள்விக்கப்பட்டது