பக்கம்:ராஜாம்பாள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 (; இராஜாம்டாள்

பஞ் செலுத்தவேண்டிய தாங்களே இப்படிச் சொன்னல் இன்னும் மூட ஜனங்கள் என்ன செய்யமாட்டார்கள்?

நீலமேக சாஸ்திரி: இந்தக் கதையெல்லாம் அளக்கா தீர், ஐந்நூறு அல்லது ஆயிரமாவது கொடுத்துத் தொலைக்கிறேன்; எப்படியாவது காரியத்தை முடித்து விடும். -

ராமண்ணு: என்ன இப்படிப் பேச ஆரம்பிக்கிறீர்கள்? ஐந்நூறு, ஆயிரம் கொடுக்கிறேனென்று சொல்லிவிட்டு அப்பால் என்னைப் பயமுறுத்தி, பணம் வாங்கிெைனன்று சிறைச்சாலையில் வைப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய் கிறீர்கள்போல் இருக்கிறதே!

நீலமேக சாஸ்திரி : எங்கள் அப்பாண அப்படிக் கில்லை. சாமி சாrதியாய் நான் உண்மை தான் சொல்லு கிறேன். - - -

ராமண்ணு: தங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை களைக் கேட்கக் கேட்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஜோஸ்யர்கள் உண்மை சொல்வதிலேயே எவ்வளவோ பாவம் இருக்கிறதென்று அடிக்கடி பிராயச்சித் தங்கள் செய்துகொள்ளுகிரு.ர்கள். அப்படி இருக்க, நன்றாய் மனத்திற்குத் தெரிந்து பொருத்தம் உள்ளதை இல்லை என்று சொல்வார்களோ? ஒருகாலும் சொல்லவே மாட்டார்கள். அப்படிச் சொன்னல் அவர்கள் பிராயச் சித்தம் செய்வதற்கே எங்கேயாவது பதியிைரம் ரூபாய் செலவழித்து யாகம் செய்தாலல்லவோ அதனல் வந்த தோஷம் நிவர்த்தியாகும்? நமக்காகப் பொய் சொல்லி விட்டுப் பதியிைரம் ரூபாய் செலவழித்து யாகஞ் செய்வ தல்லாமல் அந்தச் சிரமத்தை யார் பொறுப்பார்கள்? இதெல்லாம் நடக்கப்பட்ட காரியாதிகளல்லவே? எஜமா னவர்கள் இந்த ஏழையை இப்படியெல்லாம் சோதிக்கிறது எஜமானவர்கள் கெளரவத்துக்கு அழகல்லவே

நீலமேக சாஸ்திரி: முன்னலேயே இந்த மூட்டை எல்லாம் அளக்கவேண்டாம் என்றேனே. பதியிைரம் ரூபாய் கொடுத்தால் சரிப்படுத்துகிறேனென்று சொல்வ தற்குப் பதிலாக யாகம் செய்யவேண் என்கிறீர். நல்லது நீர் கேட்கிறபடி கொடுத்துத் தொலைக்கிறேன். காரியத்தைச் சாதித்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/34&oldid=677400" இலிருந்து மீள்விக்கப்பட்டது