பக்கம்:ராஜாம்பாள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இராஜாம்பாள்

யாக இருந்து இறந்துபோனதாலும் இரண்டு பக்கங்களி லிருந்தும் அமோகமான சொத்து எனக்குச் சேர்ந்திரும் பதால் யோக்கியதையான புருஷன் அகப்படாமல், வருகிற வன் ஒருவேளை என் சொத்தைக் கவரவேண்டுமென்ற என் ணத்துடன் என்மேல் பிரியம் இருக்கிறதாகப் பாவித்து என் சொத்தையும் விரயப்படுத்தி என்னேயும் தெருவில் விட்டால் 5576T செய்வது என்பதற்காகவே பயந்திருந் தேன்’ என்று சொன்னுள்) -

‘நீ சொத்தில்லாத ஒர் ஏழையின் பெண்ணு யிருந்தாற்கூட உன் அழகுக்காக எப்பேர்ப்பட்டவனும் உன்னேக் கல்யாணஞ் செய்துகொள்வானே! உன் அழகு உனக்குத் தெரியாததால் நீ உன் சொத்திற்காக உன்னத் கல்யாணஞ் செய்துகொண்டு அப்பால் மோசஞ்செய்து விடுவான் என்று சந்தேகிக்கிறாய்’ என்றேன். - கோபாலா! வாஸ்தவத்தில் நான் அழகாயிருக்கி றேன? என்னை நன்றாய்ப் பார்த்துச் சொல்’ என்றாள். கைப்பொன்னுக்குக் கண்ணுடியா! நீ சாமான்யமான அழகுள்ள பெண்ணல்லவே! முனிசிரேஷ்டர்களும் உன்னைப் பார்த்தால் பிரியப்படாமல் இருக்க மாட்டார்களென்றால் சாதாரணமான மனிதர் உன்னை விரும்பாமல் இருப்பார் களோ!’ என்றேன்.

அதற்கு அவள், நீ அப்படிச் சொன்னது எனக்கு அதிகச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. உன்னிடம் எப்படிப் பேச்செடுப்பது என்று வழிதெரியாமல் தின் டாடிக்கொண்டிருந்தேன். ஆளுல் இப்பொழுது நீ என்னைப் பார்த்தால் யார்தான் விரும்பார்களென்று சொன்னது. எனக்குத் தேவாமிர்தம் சாப்பிட்டால் எவ்வளவு சந்தோ ஷத்தைக் கொடுக்குமோ, அதைவிடப் பதின்மடங்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது’ என்று சொன்னுள். ‘உன்னே யார் பார்த்தாலும் நான் சொன்னதைப் போல் சொல்லுவார்களே ஒழிய, வேறே சொல்லமாட் டார்கள். நான் சொல்வதால் மாத்திரம் உனக்கு அவ்வளவு ஆனந்தம் ஏற்படவேண்டிய காரணமென்ன?” என்று கேட்டேன். -

அதற்கு அவள், ஊரிலுள்ள மனிதர்கள் மாத்திர மல்ல, தேவர்களுஞ் சேர்ந்து சொன்னலும் அதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/98&oldid=684640" இலிருந்து மீள்விக்கப்பட்டது