பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஸோமே : (மேலே பார்த்து) ஏ போக்கிரிப் புறாக்களே! உங்களுக்கு இவ்வளவு குறும்பா புளியம் பழங்களை உலுக்கி விடுவதைப் போல் உங்களை இந்தத் தடியால் மதிளில் இருந்து ஒட்டி விடுகிறேன். . மாத சோமேசா போனால் போகிறது; உட்கார்ந்து கொள். சாந்தமே உருவாகி வந்த புறாக்களை வருத்தாதே! அவைகள் ஜோடி ஜோடியாய்ச் சேர்ந்து கொஞ்சிக் குலாவிக் கும்காரம் செய்து எவ்வளவு அழகாய் விளையாடுகின்றன. அவைகளைப் பிரித்து விடாதே. தன ; (தனக்குள் புன்சிரிப்புடன்) முட்டாள் பிராம்மணன்! மேலே புறாக்களைப் பார்க்கிறானே ஒழிய என் பக்கமாகத் திரும்பவில்லை! இவனுக்கு இன்னொரு வந்தனம் அளிக் கிறேன். (இன்னொரு மண்கட்டியை எறிகிறான்) ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து திரும்பிப் பார்த்து) இதென்ன மறுபடியும் விழுகிறதே! (கொஞ்ச துரம் அப்பால் போப்/ அதோ நிற்கிறவன் யார்? தனபாலனல்லவோ? (சமீபத்தின் போய்) அடே தனபாலா வாவா. தன ஸ்வாமி தெண்டம் வருகிறது! ஸோமே : என்ன தெண்டம் கொணர்ந்து வைக்கப் பார்க் கிறாய்? இங்கே ஏதாவது பொருள் இருந்தால் அல்லவோதெண்டம் எங்களை வருத்தப் போகிறது! அதைப் பற்றிக் கவலை இல்லை. என்ன சமாசாரம்! ஏதேனும் விசேஷமும் உண்டா? தன அவர்கள் வந்திருக்கிறார்கள் ஸோமே : எவர்கள்? . தன . அவர்கள்தான் தெரியாதா? ஸோமே : எனக்குத் தெரியவில்லையே! அது யார் அந்தச் சுவர்கள்? பெயரைச் சொல்லேன். தன உமக்கு எதுதான் தெரியும் நூறு வடையை ஒரு நொடியில் உள்ளே முழுசு முழுசாகத் தள்ளி விடத் தெரியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/106&oldid=887318" இலிருந்து மீள்விக்கப்பட்டது