பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 1 19 வற்புறுத்திக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதோ பார்த் தீர்களா நம்முடைய எஜமானரின் குழந்தை வருகிறார்! (சிசுபாலன் என்னும் குழந்தை விசனத்துடன் வருகிறான். கோமளா ஒரு மண்வண்டியை இழுத்துக் கொண்டு வருகிறாள்/ கோம குழந்தாய்! வண்டியில் உட்கார்ந்து கொள் நான் இழுக்கிறேன். - - குழந்தை (கோபத்துடன் எனக்கு இந்த வண்டி வேண் டாம் போ! அடுத்த வீட்டு வாஸுதேவன் பொன் வண்டி வைத் திருக்கிறான் எனக்கு மாத்திரம் மண் வண்டியோ எனக்கு வேண்டாம் போ. (அழுகிறான்) கோம : குழந்தை அழாதே அப்பா அடுத்த வீட்டுக்காரன் கோடீசுவரன். அவனுக்கு பொன் நிறைய இருக்கிறது. பொன் வண்டி செய்து கொடுத்திருக்கிறான். பொன்னுக்கு நாம் எங்கே போகிறது? உன்னுடைய தந்தை மறுபடியும் தனவந்தராகும் வரையில் பொறுத்துக் கொள். உடனே உனக்கும் பொன் வண்டி வாங்கிக் கொடுப்பார். அழாதே வேண்டாம் அதோ பார்; அங்கே யார் நிற்கிறார்கள் பார் அவர்களை உனக்குத் தெரியுமா? குழ (கோபத்தோடு) நான் பார்க்க மாட்டேன் போ! வஸ ஆகா! என்ன அழகு! யாரே அழகுக்கு அழகு செய் வார்? சரியான ஆடை ஆபரணங்கள் ஒன்றும் இல்லா விட்டா லும் இவனுடைய இயற்கை அழகும் முகவசீகரமும் யாருக்கு வரும்? (கைகளை நீட்டி/ கண்ணே! இங்கே வா (எடுத்து மடி யில் வைத்துக் கொண்டு முத்தமிடுகிறாள்) ஆகா தன் பிதாவைப் போலவே இருக்கிறானே! குழந்தை எங்கே ஒரு முத்தங் கொடு. குழ (கோபத்தோடு) மாட்டேன் போ. கோம அவனுக்கு இப்பொழுது கோபவேளை, அடுத்த வீட்டு வாஸுதேவன்வைத்திருக்கும் பொன்வண்டியைப் போலத் தனக்கும் வேண்டுமாம். அதற்காக அழுகிறான். நான் செய்து கொடுத்த அந்த மண் வண்டி வேண்டாமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/121&oldid=887350" இலிருந்து மீள்விக்கப்பட்டது