பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வீர : அப்படியானால் அவளை நான் ஒரு தரம் பார்க்கி றேன். அரசனுடைய கட்டளையை நிறைவேற்றும் நம்மைக் கோபித்துக் கொள்வதாவது நான் போகிறேன். என்ன செய்கி றாள் பார்க்கலாம். - சந்தா அடே முட்டாள். நான் பார்த்தாய் விட்டதென்று சொல்லுகிறேன். நீ எதற்காகத் திரும்பவும் பார்க்கிறது? என்னை விட யோக்கியதையிலும், உண்மை பேசுவதிலும் நீ மேலான வனோ? என்னைப் பற்றி சந்தேகப்பட நீ யாரடா? வீர என்னைக் கேட்க நீ யாரடா? அடே வண்டிக்காரா! நிறுத்து. ஒட்டாதே; நான் வண்டியைப் பார்க்க வேண்டும். (விரகன் வண்டிக்கு அருகில் போகிறான். சந்தானகன் அவ னுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்துப் பின்புறமாகத் தள்ளி உதைக்கிறான்.) வீர (கோபத்துடன் எழுந்து, அடே இப்படிச் செய்ய உனக்கு அவ்வளவுதுணிவா. இதோ இப்பொழுதே நான் இராஜ னிடம் தெரிவித்து உன் சிரசை அடுத்த rணத்தில் வாங்கா விட்டால் நான் வீரகன் அல்ல. (போகிறான்) சந்தா : சீக்கிரம் போடா! நாயே! நீ சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்! நீ மிகவும் பெரிய மனுஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ? (குணசீலனைப் பார்த்து வேகமாய் ஒட்டிக் கொண்டு போ; வேறு யாராவது தடுத்தால் வண்டியை வீரகனும் சந்தானகனும் சோதனை செய்தாய் விட் டது என்று தெரிவி. (வண்டியைத் திறந்து) அம்ம வஸந்த ஸேனை! நீங்கள் இந்த அடையாளத்தை வைத்துக் கொள்ளுங் கள். (தன் வாளைப் பிரதாபனிடம் கொடுக்கிறான்) (இரகசிய மாக ஐயா! சந்தானகனை மறக்க மாட்டீர் என்று நினைக்கி றேன். இதைப் பிரியத்தினால் கேட்கிறேனே ஒழியப் பிரதி பலனாகக் கேட்கவில்லை. - பிரதா என்பூர்வ புண்ணியத்தின் பலனே நீ இன்று எனக்கு உதவி செய்தாய். அந்த ஜோசியன் சொன்னது உண்மையானால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/130&oldid=887368" இலிருந்து மீள்விக்கப்பட்டது