பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்த் திரும்பி வந்து வஸந்தஸேனை அம்மாளை அழைத்து வந்தேன்; தாமசத்திற்கு நானே காரணம்; மன்னிக்க வேண்டும். மாத சரி பேர்கட்டும்; வஸந்தஸேனையைக் கீழே இறக்கி விடுவோம். . ஸோமே (ஒருபுறமாக நாம் இறக்கி விடுவானேன், இவளை கால் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறதோ? ஏன் தானாக இறங்கக் கூடாதோ? இவளுக்கு எவ்வளவு மரியாதை? மாத (வண்டியின் கதவைத் திறந்து பார்த்துச் சற்று அப்பான் விலகி) ஆகா என்ன ஆச்சர்யம் யார் இது? வஸந்தஸேனையைக் காணோமே! கம்பீரமான தோற்றத்தை உடைய ஒரு புருஷன் அல்லவோ இருக்கிறான். /பிரதாபன் கீழே இறங்கி மாதவராயரை வணங்குகிறான்) பிரதாபன் ஸ்வாமி எதிர்பார்க்காத விருந்தாக நான் இந்த வண்டியில் வந்ததற்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆபத் திற்குப் பாபம் இல்லை என்று நியாயம் உண்டல்லவா? நான் இந்த வண்டியில் வந்திராவிட்டால் என் உயிரே போயிருக்கும்; ஆகையால் இந்தப் பிழையைத் தாங்கள் மன்னிக்க வேண்டும். (வணங்குகிறான்) - குண: (நடுநடுங்கி) இதென்ன ஆச்சரியம் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல, இவன் வண்டிக்குள்ளிருந்து வரு கிறானே யார் இவன்? இதற்குள் எப்படி நுழைந்தான்? வஸந்த ஸேனை எங்கே? /கையைப் பிசைந்து கொண்டு ஒரு மூலை பின் நிற்கிறான்) மாத (பிரதாபனைப் பார்த்து/ அப்படியானால் நீ வண்டி யில் வந்ததைப் பற்றிச்சந்தோஷமே! நீ யார்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? இந்த வண்டியில் நீ எப்படி ஏறிக் கொண்டாய்? பிரதா நான் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன் என் பெயர் பிரதாபன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/134&oldid=887376" இலிருந்து மீள்விக்கப்பட்டது