பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 153 தோழ நீர் குற்றமற்றவராய் இருந்த போது உமக்கு நான் எவ்வளவோ பணிந்து நடந்தேன். குற்றவாளியை இனி நான் ஒருக்காலும் பணிய மாட்டேன். அதிலும் ஸ்திரீயைக் கொன்ற வனோடா நட்புக் கொள்ள வேண்டும். ஆகா வஸந்தஸேனா உன்னுடைய நற்குணத்திற்கு நீ அடுத்த ஜென்மத்திலாவது சுகம் பெறுவாய். உன்னைக் கொலை செய்ததற்கு ஈசுவரன் எப்படி யும் பழி வாங்கி விடுவான். (போகிறான்) வீர கொலை செய்து விட்டு எங்கே ஒடப் பார்க்கிறாய்? இராஜாவினிடம் போக வேண்டும். வா என்னுடன் அங்கு வந்து உன்னுடைய நியாயத்தைச் சொல்லித் தப்பித்துக் கொள். (பிடிக்கிறான்) தோழ முட்டாளே போ அப்பால். (கோபத்தோடு தன் கத்தியை உருவுகிறான்./ வீர (அஞ்சிப் பின் வாங்கி) சரி, சரி உனக்கு அச்சமாய் இருந்தால் நீ போய் விடு. இங்கே நிற்காதே. தோழ (தனக்குள் நான் இந்த நகரத்தில் இருந்தால், இந்தப் படுபாவி என் பேரில் இந்தக் குற்றத்தைச் சுமர்த்தி என்னைப் பல துன்பங்களுக்கு ஆளாக்குவான். நான் இந்த ஊரை விட்டுப் போய் பிரதாபனுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். (போப் விடுகிறான்) - வீர : அடே பத்மநாபா என்ன நீ கூடவா பயப்படுகிறாய்? பத்ம ஸ்வாமி! இது மிகவும் கொடிய விஷயம் அல்லவா? வீர. நீயும் என்னைத்துவிக்க ஆரம்பித்தாயா? இதோ இந்த ஆபரணங்களை வெகுமதியாக எடுத்துக் கொள். நான் நன்றாய் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் நீயும் எனக்குத் தகுந்த படி இருக்க வேண்டாமா? நேரமாகிறது, நீ வண்டியை ஒட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போ; நான் பின்னால் வருகிறேன். பத்ம : அப்படியே செய்கிறேன். (போப் விடுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/155&oldid=887423" இலிருந்து மீள்விக்கப்பட்டது