பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் விசா : சரி, எழுதிக் கொண்டேன். வீர (தனக்குள்) என்ன முட்டாள்தனம் யானை தன் தலை யில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போலப் பேசி விட்டேனே சரி, சொல்லியாய் விட்டது இனி என்ன செய் கிறது! ஐயா! நியாயாதிபதி அதிக மேதாவியாகிய தாங்கள் இந்த அற்ப விஷயத்தைப் பற்றி இவ்வளவு பிரமாதம் செய்கிறீர் களே! ஆனால் நானல்ல இச்செய்கையைப் பார்த்தவன் என்று சொல்ல உத்தேசித்தேன். - நியா: அப்படியானால் அவளுடைய ஆடை ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு யாரோ அவள் தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டதாக உமக்கு எப்படித் தெரிந்தது? வீர : அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். ஏனென்றால் அவளுடைய கழுத்து வீங்கிப் போய் இருந்த தோடு ஆபரணங்களும் போயிருந்தன. நியா இருக்கலாம். வீர (தனக்குள் உயிர் வந்தது? நியா: சரி, வஸந்தஸேனையின் தாயை முதலில் விசாரிக்க வேண்டும். அடே சேவகா அவளை வரவழை. சேவ உத்தரவு. (போப் அழைத்துக் கொண்டு வருகிறான்) சேவ அம்மா! இப்படியே வா இதுதான் வழி. தாய்க்கிழவி (தனக்குள்) என்னுடைய குழந்தை வஸந்த ஸேனை தன் நண்பர் வீட்டிற்கு நேற்றிரவு போனவள் இன்னம் வந்து சேரவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இவன்நியாயாதிபதி அழைப்பதாகச்சொல்லு கிறான். என்ன காரணமோ, என்ன சம்பவித்ததோ தெரியவில்லை. என் மனம் பதைக்கிறது. என்ன செய்வேன்? போனால் உண்மை தெரிகிறது. (திபாயாதிபதியை நோக்கி) ஸ்வாமி! நமஸ்காரம். நியா வா! அப்படி நில்லு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/162&oldid=887437" இலிருந்து மீள்விக்கப்பட்டது