பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 175 யும் தவறாத சர்வ வல்லமையுடைய ஈசுவரனால் படைக்கப் பட்ட இந்த உலகில் இப்படி நடப்பது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது! இவ்விதம் நடப்பதற்கு விதி என்னும் ஒரு மூல கார ணம் இருந்த போதிலும் இப்பொழுது நேரில் பார்ப்பவர்களுக்குக் கடவுளிடத்து ஒருவித அவநம்பிக்கையும், தூஷணையும், ஒரு விதக் களங்கமும், ஏற்படுகின்றன அல்லவா? எவ்வளவு பெருத்த குற்றம் எவ்வளவு சுருக்கமான விசாரணை எவ்வளவு துரிதமான தீர்மானம்! நல்ல நியாய ஸ்தலம் தீர்மானம் செய்த அரசனும் நல்லவனே ஒரு விரோதியின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு இப்படிச் செய்தால் உலகத்தில் மனிதருக்குப் பாதுகாப்பேது? அரசனே இப்படிக் குற்றமற்றவர்களை வருத்தி நீ எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? ஏழை அழுத கண்ணிர்கூரிய வாளை ஒக்கும் அல்லவோ அரசனே, உனக்கு நரகம் ஆயத்தமாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது; கவலைப்படாதே. சேவகர், வா போகலாம். (போகிறார்கள்) இடம் : இராஜ வீதி. இரண்டு சண்டாளர் மாதவராயரைக் கழுமரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகும் சமயம். ஜனங்கள் நெருங்கு கிறார்கள். - மாதவராயர் பாடிக் கொண்டு வருகிறார். நாதநாமக்கிரியை - திரிபுடை ப. இதுவோ தலைவிதியோ? எனது காலகதியோ? அ. பொதுளும் பொரு விரிழந்தும் உறுவோர் தலையிழந்தும் துதியும் புகழிழந்தும் மதியாச் சிறுமைதன்னில் பதியும் மனையும் சேயும் அகலக் கொலைஞனானேன்; கதியே திணிக் கருணாநிதியே யெனது துணை (இது) 1 சண் இதென்ன இம்பிட்டுக் கூட்டம் போங்கையா அப் பாலே. ஒங்கிளுக்கெல்லாம் இங்கிட்டு என்னய்யா சோலி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/177&oldid=887469" இலிருந்து மீள்விக்கப்பட்டது